பக்கம்:கண்ணகிக் கதை.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கண்ணகி கதை
27

பதியினர் பார்த்தவர் பரவசம் கொண்டார்
பத்தினிக் கண்ணகி செய்பாவமே தென்றார்
புன்னைமர நீழலைக் கரையினில் கண்டார்
பொன்மணல் அங்கே நிறைந்ததைக் கண்டார்
அன்னவிடம் தங்கற் கரியவிடம் என்றார்
அழகிய கூடாரம் அமைக்கவே நின்றார்
சித்திரத் திரையினைச் சுற்றிலும் வளைத்தார்
சிங்கார விதானம் சேர்த்தே பிணித்தார்
அத்தகு கூடாரம் உள்ளே புகுந்தார்
அழகான கட்டிலின் மீதே இருந்தார்

வசனம்

இந்திரவிழாவின் முடிவிலே சந்திரவதனத்து மாதர்களும் சுந்தரப் பொன்மேனி இளைஞரும் கடலாடி வருதற்குக் களிப்போடு செல்வார்கள். அந்த முறையில் கடலாடி வந்த கோவலனும் மாதவியும் கடற்கரையில் அமைந்த, தாழைவேலி குழ்ந்த, தனிப் புன்னைமரத்தின் தண்ணிய நிழலிலே தங்கினர். மாதவி, தனது காதல் தோழியாகிய வசந்த மாலையின் கையமர்ந்த வாழைக் கடிதே வாங்கினாள். சித்திரப்பூங்கட்டிலில் சித்தங்குளிரப் பக்கத்தே யிருந்த பண்பான - அன்பான கோவலன் திருக்கையில் விருப்போடு கொடுத்தான்.

பாட்டு

கொடுத்த யாழைக் கோவலன் வாங்கித்
தொடுத்த நரம்பைத் துளக்கி இசைத்தான்
குரலிசை யாழிசை குழைய இசைத்தான்
திரமுறு பாலைத் தீம்பண் இசைத்தான்
கானல் பாட்டு காவிரிப் பாட்டாம்
தேனிகர் இன்னிசைத் தீந்தமிழ்ப் பாக்கள்

4