கண்ணகி கதை
31
சோமாற் குண்டம் சூரியபொற் குண்டம்
தாமரைக் குளங்களிவை சார்ந்துநீ ராடி
கரையிலுள காமவேள் கோயிலதை நாடி
தரையிலே உடலாரத் தகவுற வணங்க்ப்
பிரிந்திட்ட கணவனும் பொருந்துவன் இணங்க
அருந்துயரம் ஒழியகாம் அடைகுவம் ஆங்கே
இருகுளம் நீராடிக் கருவேளைப் பணிவோம்
ஒருநாளில் என்ைேடு உவப்புடன் வருவாய்
தேவந்தி கன்மொழியைச் செல்வியவள் கேட்டாள்
பாவமகள் தமிழ்நாட்டுப் பண்பொன்றும் அறியாள்
எனவெண்ணிப் புன்முறுவல் ஏந்திழையும் செய்தாள்
கனிவுடைய தோழியவள் கனிந்தமொழி கேட்ட
கண்ணகியாம் கற்பரசி சொன்னமொழி கேட்பீர்!
இசை வேறு
அன்புநிறை தேவந்தியே!
அரியதமிழ் நாட்டியல்பை
இன்பமொடு கேட்டிடுவாய்
இனியவழி காட்டிடுவாய்
பயன்கருதித் தீர்த்தமாடார்
பழையதமிழ் நாட்டுமாதர்
நயனுடைய கணவரன்றி
நற்றெய்வம் கண்டறியார்
கொழுகனே தெய்வமென்று -
கொண்டுவணங் கிடுவரம்மா !
பழுதாகும் உன்மொழிகள்
பைந்தமிழர் போற்ருரம்மா !
வசனம்
அற்புடைய பெண்டிர்க்குக், கொண்ட கணவரே கண்.
கண்டி தெய்வமாவார்; அவரைமன்றிப் பிறதேகியங்களைப்
____________________________________________________________