கண்ணகி கதை
33
பாட்டு
தோழியோடு கண்ணகி சொல்லாடும் வேளை
ஊழியப்பெண் னொருத்தி ஓடோடி வந்தாள்
தாயனைய கண்ணகி! தலைவர் வருகின்றார்
தூயநம் கோவலத் துணைவர் வருகின்றார்
இங்ஙனம் பணிப்பெண் இயம்பியே நின்றாள் மங்கைமொழி கேட்ட மாதரசி உள்ளம்
கொள்ளுவகை எல்லை கொள்ளுமோ சொல்லும் தள்ளரிய காதல் தள்ளிட எழுந்தாள்
தேவந்தி விடைபெற்றுத் தன்மனை அடைந்தாள் கோவலனை எதிர்கொள்ளக் கோதைவெளி வந்தாள்
ஏவல்புரி பாவையும் இன்பொடு தொடர்ந்தாள்
கோவலனும் நேரே குளிர்மனை யடைந்தான்
அண்ணலின் முகத்தில் அருங்கவலை கண்டாள் கண்ணகி மலர்ச்சியொடு கடிதுவர வேற்றாள்
கள்ளமில் கண்ணகியின் உள்ளமது கண்டான் வெள்ளமெனப் பாயுமவள் விருப்பத்தைக் கண்டான் பள்ளியறை சென்றுபூம் பள்ளியில் அமர்ந்தான்
மெள்ளவே கண்ணகியும் மெல்லமளி சாய்ந்தாள்
இருவரும் சிறுநேரம் எதையுமே அறியார்
பிரிந்தவர்கள் கூடினால் பேசவும் வேண்டுமோ?
இன்பமது இழந்த ஏந்திழை கண்ணகியை
அன்புநிறை கண்ணால் ஆர்வமொடு பார்த்தான்
திருமகள் கண்ணகி உருமேனி வாட்டம்
பருவூசி பல்லா யிரம்பாய் தலைப்போல்
தன்னுளம் வாட்டப் புண்ணாய் உலைந்தான்
தன்னுடைய குற்றமது தானுணர்க் திட்டான்
கற்பினுக் கணியே! பொற்புடைய மாதே!
அற்புடைய கண்ணகி!அறிவினை இழந்தேன்