பக்கம்:கண்ணகிக் கதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கண்ணகி கதை

35

சிலம்புகள் கொண்டிடுவீர்
சிந்தைகளி கொண்டிடுவீர்
புலம்புதல் நீங்கிடுவீர்
புந்திமகிழ் வோங்கிடுவீர்
என்றுசொல்லிக் கண்ணகியாள்
இன்பமொழி கூறிட்டாள்
நன்றுரைத்த மங்கைமொழி
நன்னயத்தை எண்ணியிட்டாள்
கற்புக் கருங்கலமே!
கண்ணகியே பெண்ணணங்கே!
பொற்புடைய இச்சிலம்பைப்
பொருளாகக் கொண்டிடுவேன்
சிலம்புகளை விற்றிடுவேன்
செய்யபொருள் முதலேற்பேன்
நலம்புரியும் வாணிகத்தை
நாளைமுதல் செய்திடுவேன்
இந்நகரில் விலைகூற
என்றனுளம் நாணுமம்மா !
பொன்னகர மாமதுரை
போந்திவற்றை விற்றிடுவேன்
பொழுது புலர்வதற்குள்
புறப்பட வேண்டுமம்மா!
எழுவதற்கு வேண்டுவன
ஏற்றமொடு சேர்த்திடுவாய்
என்றுசொல்லிப் பள்ளிபுகுந்து
இறைப்பொழுது தூங்கியிட்டான்
நன்றுசொன்ன கோவலனின்
நன்மொழிகேட் டின்புற்றாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/34&oldid=1296532" இலிருந்து மீள்விக்கப்பட்டது