இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
கண்ணகி கதை
தானடைந்த துயரமெல்லாம்
தகர்ந்து மறைந்ததென்றாள்
கோனடைந்த இன்பமொன்றே
கோதற்ற செல்வமென்றாள்
இருட்போது நீங்குதற்குள்
இருவரும் எழுந்துவிட்டார்
பொருள்தேட மாமதுரை
புறப்படத் துணிந்துவிட்டார்
பூம்புகார் நகரமதைப்
புறம்நீங்கி வழிநடந்தார்
தாம்புகும் வழியிடையே
தக்கபொழில் ஒன்றுகண்டார்
நெடுந்தொலை நடந்தறியா
நீள்கண்ணி மலரடிகள்
நடந்திடவே முடியாமல்
நலிவுற்று மெலிந்தவையா !
தரைமகள் கண்டறியாள்
தையலவள் மலரடிகள்
துரைமகன் கோவலனோ
துயர்கண்டு துளங்கிநின்றான்
மாமதுரை எங்குளது
மன்னதுரை சொல்லுமென்றாள்
தேமதுரத் தூமொழியால்
ஆறைங்கா வதமென்றான்
வசனம்
மதுரைமாநகரம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்றுகேட்ட கண்ணகியின் உள்ளம் கலங்கிவிடாத வண்ணம்,நயம்பட வுரைத்த கோவலன் நாவன்மையே வன்மை!