கண்ணகி கதை 37"
திறம்பெற்ற அறிவுற்ற கோவலன், ஐந்தாறு காவதம் தூரத்தில் உள்ளது என்று சொல்லினான். காவதம் என்பது பத்துக்கல் தூரம். ஐந்தாறு காவதம் என்பது முப்பது காவதமாகும். முப்பது காவதம் முந்நூறு கல்தொலைவு கொண்டதாகும். முந்நூறுகல் தூரத்தில் உள்ளது முத்தமிழ் மாமதுரை என்று சொல்லியிருந்தால். கண்ணகி என்னநிலை அடைந்திருப்பாள்:கல்லைக் காவதமாக்கினான்:முப்பதை ஐந்தாறு என்று மாற்றினான், ஐந்தாறு காதை தூரத்திலுள்ளது என்று சொன்னான். இப்படிச் சொல்வது ஒரு சாமர்த்தியம் ; கேட்பவர்க்கு அயர்ச்சி தோன்றா. திருக்க அரிய வழி. தற்காலத்திலும் வயது முதிர்ந்த பெரியவர்களிடம் வழியெல்லை கேட்டால், அந்த வழிகளை வருத்தம் தோன்றாவண்ணம், "இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கிறது !' என்று சொல்வதைக் கேட்கலாம். தற்கால இளைஞர்களிடம் கேட்டாலோ அணுவையும் மலையாக்கி அதனையும் விலையாக்கி விடுவார்கள்.
பாட்டு
அரும்பொழில் இருந்திட்ட அரிவையும் கோவலனும் விரும்பியே வழிநடக்க மீண்டும் புறப்பட்டார் இடைவழியில் அறப்பள்ளி இருக்கவதில் புக்கார்கள் நடைவருத்தம் நீக்குதற்கே நன்கமரப் புக்கார்கள் உள்ளிருந்த பெண்துறவி உயர்கவுந்தி கண்டார்கள் தெள்ளுசமண் துறவியவள் தேர்ந்தபே ரறிவுடையாள் அன்னவளை இருவர்களும் அடிவணங்கி நின்றாகள் மன்னுதவக் கவுந்தியவள் வந்தவரை நோக்கியிட்டாள் பெருஞ்செல்வ ராம்நீங்கள் பேரூரும் சீர்மனையும் பிரிந்திங்கு வந்தமையேன் ? பெருங்குடிக் கழகன்றே தாயன்ன கவுந்தியவள் தானுரைத்த மொழிகேட்டார்
m