பக்கம்:கண்ணகிக் கதை.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கண்ணகி கதை ‌ 39

ரதியும்போன்ற இவர்கள் யாரென்று கவுந்தியடிகளிடம் கேட்டார்கள்.'இவர்கள்என்மக்கள்' என்றார் கவுந்தியடிகள்.'நன்று! நன்று! ஒரு தாய் வயிற்றில் உதித்த மக்கள் கணவனும் மனைவியுமாய் வாழ்தல் காசினியில் உண்டோ?'என்று கேட்டார்கள்.அது கேட்டகவுந்தி கடுஞ்சினம் கொண்டு"புகழ்ந்து போற்றும் புனிதமக்களை இகழ்ந் துரைத்த நீங்கள் நரிகளாக மாறி, உறையூர்க் காட்டில் ஊளையிட்டு உலைந்து அலைந்துஒழிவீர்!" என்று சபித்தார்.

           பாட்டு 

காவுந்தியின் சாபம் கடுகவே பற்றியது பாவியர் இருவோரும் பாழ்நரிகள் ஆனார்கள் நரிகள் நிலைகண்ட நம்பியும் நங்கையும் அரிய தவமகளைச் சாபவிடை அருள்கென்றார் உற்றநரிகளிஒராண்டு கழிந்த பின்னர் பெற்றிடுக முன்னுருவம்என்றருள் பேசியிட்டார் மூவரும் உறையூரைமுன்னியிராத் தங்கிட்டார் போம்வழியில்ஐயைபொற்கோயில் கண்டிட்டார் கோயிலின் உட்புகுந்து குந்தி இருந்திட்டார் ஆயநல் வேளையதில் ஆடினாள் தேவராட்டி சாலினி தெய்வமேறிச்சாலமொழி பலசொன்னாள் நடுவேகண்ணகியாம்நங்கையைச் சுட்டியிட்டாள் கொங்கச் செல்வியவள் குடமலை யாட்டியவள் தென்றதமிழ்ப் பாவையவள் செய்தவக் கொழுந்தவளே என்றுபின் நிகழ்செய்தி இயம்பி மகிழ்ந்திட்டாள் இவள்சொன்ன மொழியதனை எவரும் அறிந்திலரே பாண்டியன் ஆட்சியது பாரறிந்த மாட்சியது ஈண்டிரவு சென்றாலும்ஏதம்விளை யாதையோ இவ்விதம் சொல்லியவர் இரவில் வழிநடந்தார்