பக்கம்:கண்ணகிக் கதை.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கண்ணகி கதை

அவ்வழியில் பார்ப்பனர் அகம்நிறை சேரியொன்று
பார்ப்பனச் சேரியின் பக்கம் ஒரு கோயில்
சார்ந்தவண் கண்ணகியும் தவமகளும் அமர்கென்றான்
காலைக் கடன்கழிக்கக் கடிதே அகன்றிட்டான்
சாலவும் சேய்மையுள்ள தடாகம் அடைந்திட்டான்
அங்கே மாதவியால் அனுப்பலுற்ற கெளசிகனும்
பொங்கும் உவகையுடன் புகுந்தவனைக் கண்டிட்டான்
அண்ணலே! என்செய்தாய்? அரியநின் பெற்றோர்கள்
மண்ணும் மணியிழந்த மாநாகம் போலுழந்தார்
உயிரை யிழந்திட்ட உடம்புபோல் சுற்றத்தார்
துயரப் பெருங்கடலில் தோய்ந்து மூழ்கியிட்டார்
பணியாளர் எல்லாம் பல்வேறு திசைசென்றார்
மணிமுடித் தசரதனின் மைந்தன் இராமனன்று
அருநகர் அயோத்தி அகன்ற ஒருநாளில்
வருந்திய அந்நகர மக்களைப் போலூரார்
துன்பக் கடல்வீழத் தோகை மாதவியாளும்
அன்பனைக் காணாது உணவும் அருந்தவில்லை
பசந்த மேனியளாய்ப் படுக்கையில் வீழ்ந்திட்டாள்
வசந்த மாலைசொல்லால் வாடி வருந்திட்டாள்
என்பால் இவ்வோலை தந்துனக் கீகவென்றாள்
கண்மணி யனையாற்குக் காட்டுக ஈதென்றாள்
பன்னாடும் தேடியுனைப் பார்க்க முடியாமல்
இந்நாளில் கண்டேன் இதுபெறுக எனவளித்தான்
ஓலை விரிக்குமுன்னேஉற்றஇலச் சினைகண்டான்
கோல மாதவியாளின் கூந்தல் குறியதுவே
அடிகள் முன்னர்யான் அடிவீழ்ந்தேன் வாசகமாம்
வடியாக் கிளவியிது மனக்கொளல் வேண்டுமையா
என்றினைய வாசகங்கள் இருக்கவே வாசித்தான்
நன்றனைய வாசகங்கள் நயந்தீன்ற பெற்றோர்க்கும்