பக்கம்:கண்ணகிக் கதை.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி கதை 4?

ஏற்ப இருத்தலினால் ஈந்தான் மறுபடியும் சேர்ப்பாய் இதனையென்றன் செல்வமிகு பெற்றோர்க்கு வந்தனைகள் சொல்லி வழங்கி நலமுரைப்பாய் வந்த மறையோனே மாமதுரை யாமடைவோம் பெற்றோர் துயர்தீர்க்க விரைந்து பெயர்ந்திடுவாய் உற்றாற் கோசிகனே! உறுவாய் புகார்நகரம் இங்ங்ணம் வழியனுப்பித் தங்கிய கோயிலுற்றான் மங்கையும் தவமகளும் தங்கிய இடமுற்றான் மீண்டும் அவருடனே வேண்டி வழிநடந்தான் ஆண்டுச் சிலபாணர் அரியவழி கூறியிட்டார் பகலில் கடைவருத்தம் அகல இருந்திட்டார் தகவாய் இராநடந்து தமிழ்மதுரை தான்கண்டார்

மதுரை நறுந்தென்றல் வந்துவீசக் கண்டார் அதிரும் பெருமுழக்கம் அண்மையில் கேட்டிட்டார் முன்னவன் திருக்கோயில் முக்கண்ணன் உறைகோயில் பொன்னான கோபுரங்கள் கண்ணில் தெரியக்கண்டார் மன்னவன் பாண்டியனின் மாளிகைக் கொடிகண்டார். மன்னுமலை போல் மலைகள் மலிந்து விளங்கக்கண்டார் எழுந்த ஒலிகூடி எழுகடல் ஒலியைப்போல் மிகுந்திடக் கண்டவர்கள் மேலும் நடக்கலுற்றார் தண்டமிழ்ச் சுவைகண்ட வையை தனையடைந்தார் கொண்ட புணையேறிக் குறுகினார் தென் கரையை வலமாகப் போந்து மதிலின் புறமடைந்தார். நலமாகக் கீழ்த்திசையில் இலகும் பள்ளிகண்டார் உறுநாள் களைப்பாறி ஆங்கே உவகையுற்றார் மறுநாள் வைகறையில் மைந்துடைய கோவலனும் . நேர்ந்த துயரனைத்தும் சார்ந்துகவுந் திக்குரைத்தான்

ஆர்ந்த தமிழ்மதுரை அணிகலம் காணலுற்றான் சென்று வருமளவும் செல்வியைக் காத்தருளும்

mmm