43
கண்ணகி கதை
என்று பணிந்துரைக்கக் காவுந்தி இயம்பிடுவார்
நளனும் இராமனும் நங்கையரைத் தாம்பிரிந்து
வளநகர் தாம்நீங்கி வருத்தம் மிகவடைந்தார்
அக்கதை கேட்டிலையோ? அவ்விதம்நீ இல்லையையா தக்கவுன் காதலியோ தகவாய் உடன்வந்தாள்
வருந்தாது சென்று வருக! நீ என்றுரைத்தார்
பெருந்தகை கோவலனும் பெயர்ந்துநகர் உட்புகுந்தான் மாமதுரை வளமெல்லாம் மகிழ்வாகக் கண்டுவந்தான்
ஏமத் திருநகரின் இயல்பை அறிந்துவந்தான்
கண்டுவந்த காட்சிகளைக் கவுந்தியடி கட்குரைத்தான் பண்டைய நட்பாளன் பார்ப்பன மாடலனைச்
சந்தித் துரையாடிச் சிந்தை மகிழ்ந்திட்டான்
அந்த வேளையிலே வந்தாளோர் ஆயர்மகள்
மாதரி என்னுமவள் மாதவள் நட்புடையாள்
கோதில் குணமுடையாள் கோவலர் வாழ்வுடையாள் அன்னாள் அடைக்கலமாய்க் கண்ணகி யைச்சேர்க்க
எண்ணி அழைத்திட்டார் பண்ணு தவமுடையார்
மாதரியே! சோதரியே! ஆதரவு செய்திடுவாய்
மாதிவள் கண்ணகியாள் மாபெரும் குலமுதித்தாள்
இந்நகர் வணிகமக்கள் இவர்நிலை அறியும்வரை
உன்றன் அடைக்கலமாய் உதவினேன் கொள்கென்றார் குலத்தவர் இவள் தந்தைகொண்டபெயர் கேட்டிட்டால் லத்திரு அடைந்தார்போல் நன்கு மகிழ்ந்திடுவார்
இவளுக்குத் தாயும் இனியதோ ழியும்நீயே
மகள் அடைக்கலம் தக்கநற் பயனளிக்கும்
ன்னவே கண்ணகியின் கற்பை இயம்பியிட்டார்
பொன்னேர் கற்புடையாள் புண்ணியத் தெய்வமிவள் கற்புநிறை மாதர் வாழும் கவின்நாட்டில்
னமோ பொய்யாது வளமோ சுருங்காது