கண்ணகி கதை
43
கோனவன் வெற்றி என்றுமே குன்றாது
இவ்விதம் சொல்லியிட மாதரி ஏதுரைப்பாள்
கொவ்வை இதழுடையாள் நவ்வியிள மானனையாள் பெண்ணரசி யோடவளும் பேணும் மனையடைந்தாள்
அண்ணல்கோ வலனுடனே அருமனை இருத்தியிட்டாள் தன்மகள் ஐயையினைத் தனித்தோழி யாய்அமைத்தாள் பொன்மகள் கண்ணகியைப் போற்றிநீ ராட்டிவைத்தாள் உணவுக்கு வேண்டுவன உதவிப் பேணியிட்டாள்
குணவதி கண்ணகியும் உணவு சமைத்திட்டாள்
இனிய சுவையுணவை ஆக்கி அமைத்திட்டார்
அரிய கணவன் அடிமலர் கழுவியிட்டாள்
குமரி இளவாழைக் குருத்தை விரித்திட்டாள்
அமுதுண்ண வந்தருள்க அடிகளே!என்றுரைத்தாள்
மலர்ந்த முகத்துடனே மாதரசி தான்படைத்தாள்
கலந்த உளமுடையான் கனிந்தமுது இனிதுண்டான்
விரும்பியமர் கோவலற்கு வெற்றிலைச் சுருள் தந்தாள் அரும்பிய மூரல்கண்டு அளவிலா மகிழ்வுகொண்டான்
கண்ணே!கருமணியே கற்புடைய பொற்பாவாய் !
எண்ணரிய சீறடிகள் இனைந்து வருந்தினவே
உன்றன் நிலையெண்ணி உலைவரே பெற்றோர்கள் இன்றியாம் பெற்றதுயர் கனவோ நனவோதான்
முன்செய்த தீவினையும் மூண்டு விளைந்ததுவோl
புண்செய்த என்றனுக்குப் புகுங்கதி உண்டாமோ !
இருமுது குரவர்க்கும் ஏவல் ஒழிந்திட்டேன்
திருமகள் நின்றனக்கும் தீங்குபல விழைத்தேன்
வசனம்
என்று உள்ளம் வருந்திக், கோவலன் கூறிய உண்மை வாசகங்களைக் கண்ணகி கேட்டாள். கணவனைப் பிரிந்து
■