கண்ணகி கதை
வாழ்ந்த தனது அருந்துயர் நிறைந்த வாழ்வைக் கோவலனுக்கு நயமுற விளக்கிக் கூறினாள். இல்லறத்தை இனிது நடத்தமுடியாதிருந்த திறத்தை எடுத்து விளக்கினாள். அறவோர்க்கு அளித்தல், அந்தணரை ஒம்பல், துற வோர்க்கு எதிர்தல், விருந்தினரை ஏற்றல் ஆகிய நல்லறங்களைச் செய்யவியலாது சிந்தை நொந்திருந்த தன்னக் கண்டு பெற்றோர் உற்ற பெருந்துயரைத் தெரிந்துரைத்தாள். "அப் பெற்றோர் வருந்தும்படியாக,நீர் பொருந்தா வொழுக்கத்தைப் பொருந்தினீர் ; என்றாலும் உம் சொல் கடவாத யான், உடன்வருக என்றபோது உடன்பட்டு வந்தேன்," என்றுரைத்துப் புன்முறுவல் பூத்து நின்றாள். அவளை அன்போடு நோக்கினான் கோவலன்.
பாட்டு
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னெடு போந்தீங்கு என்துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்
காணின் பாவாய் நீணில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சிற்றடிச் சிலம்பைப் பெற்றியான் செல்வேன்
விற்றுநான் வருவேன் மெல்லியல் மயங்கேல்
என்றுகண் ணீர்மறைத்(து) இடமகன் றிட்டான்
அன்றெதிர் வந்தகொல் லேற்றையும் அறியான்
அணிநகர் ஆவண வீதியை அடைந்தான்
பணிபுரி தட்டார் பல்லோர் சூழ்ந்திட
மன்னவன் வரிசை வாங்கிய தட்டான்
பொன்னாடை புனைந்து போந்திடக் கண்டான்
அவனை நெருங்கி அணிதனைக் காட்டி