பக்கம்:கண்ணகிக் கதை.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணகியின் கதை

45

நவமணிச் சிலம்பிது அரசியர் நயப்பது
விலைமதிப் பிடற்கு வல்லையோ விளம்பென
புலைத்தொழில் உடைய பொற்கொல்லன் பார்த்தான் சிலம்பின் அருமை சிறக்க நோக்கினான்
வலங்கொள் மன்னன் தேவி மகிழ்வது
உயர்ந்த சிலம்பிது அரசியர்க்(கு) உரியது
அயர்ச்சி நீங்கஇச் சிறுமனை அருகே
அமர்க என்றே அரண்மனை நோக்கினான்
தமரை யகன்று தனியே விரைந்தான்
முன்னர் அக் கொல்லன் மன்னவன் தேவி
பொன்னுறு சிலம்பைக் கவர்ந்த புலையன்
ஆதலின் இச்சிலம்பு அரசற்குக் காட்டி
வேதனைத் துன்பம் விலக்கிட நினைத்தான்
அரண்மனை புகுந்தான் அரசனைக் கண்டான்
அரசன் அந்தப்புரம் விரைய நோக்கினான்
தேவியின் ஊடல் தீர்க்க விரைந்தான்
பாவி பொற்கொல்லன் பார்த்தஅந் நேரம்
ஊழ்வினை உருத்துவந் தூட்டிடும் நேரம்
சூழ்ச்சி பயன்தரும் சொல்லிய நேரம்
அரசே! ஈதோ அடைந்ததச் சிலம்பு உரைசெய் சிலம்புத் திருடனும் உள்ளான்
எளியேன் மனைப்புறம் உள்ளனன் இப்போ
அளியருள் புரிக! அடியேன் பணிந்தேன்

வசனம்

பொற்கொல்லன் சொற்களைக் கேட்ட புரவலனாகிய பாண்டியன்,சேவகரை கூவியழைத்தான். அக்காவலர்களை நோக்கிச் சற்றும் ஆராய்ச்சியற்றவனாய், "அரசியின் சிலம்பு, இவன் கூறிய கள்வனிடத்தில் உள்ளதாயின்