பக்கம்:கண்ணகிக் கதை.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கண்ணகி கதை

49

கண்ணீரை மாற்றியிட்டான்
கலங்காதே இருக்க!என்றான்
வண்ணமலர்ப் பாதம்பற்றி
வணங்கியே மங்கையழுதாள்
மீண்டுமவன் உயிர்நீங்கினான்
மெல்லியல் கதறுகின்றாள்
ஈண்டுபழி ஓட்டிடுவேன்
இனியபுகழ் நாட்டிடுவேன்
அரசனைக் கண்டவன்முன்
அரியவழக் காடிடுவேன்
பெருமகனைக் கள்வனென்ற
பேரூரை அழித்திடுவேன்
மன்னன்அரண் மனையடைந்தாள்
வாயிற்கா வலனைக்கண்டாள்
சொன்னஎன் செய்திதன்னைச்
சொல்லுக அரசற்கென்றாள்
அவ்வேளை அரசன்தேவி
தான்கண்ட அரியகனாவைச்
செவ்வையாய் மன்னனுக்குச்
செப்பியே உடனிருந்தாள்
கண்ணகியின் கோலங்கண்ட
காவலன் ஓடிச்சென்றான்
மன்னவனே காளிபோலும்
மாதொருத்தி வாசலிலுள்ளாள்
காதலனை இழந்தவளாம்
கையிலொரு சிலம்புகொண்டாள்
ஓதவொரு செய்தியுண்டாம்
உம்மிடம் என்றுசொன்னான்