பக்கம்:கண்ணகிக் கதை.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



54

கண்ணகி கதை

மரித்தஅச் சங்கமனின்
மனைவியும் நீலிஎன்பாள்
ஆறெட்டு நாட்களாக
அலைந்துபெருந் துயரமுற்றாள்
ஏறிமலை மேலேநின்றாள்
எரிசாபம் கூறிவீழ்ந்தாள்
எந்தமக்கு இத்துயரம்
இழைத்தவர்கள் மறுபிறப்பில்
இந்தவகைத் துயரடைவார்
என்றுசொல்லி வீழ்ந்திறந்தாள்
பரதனே கோவலனாய்ப்
பாரினிலே வந்துதித்தான்
சரதமாய் வந்ததுன்பம்
சார்ந்தீர்கள் இப்போதம்மா!
பதினான்கு நாட்கழித்துன்
பதியினைக் காண்பாயம்மா!
மதுரையின் அதிதேவதை
வாய்மையே உரைத்தேனம்மா!

வசனம்

இவ்விதமாக மதுரையின் அதிதேவதை, மாண்புற்ற கண்ணகியின் முன்னே தோன்றிக், கோவலனின் பழம் பிறப்பு வரலாற்றை விளங்குமாறு கூறியது. அவளது மனத்துயரை மாற்றித் தேற்றியது. பின்பு, கண்ணகி மதுரையைவிட்டு நீங்கினாள். பாங்கான வையையின் பரந்த கரைவழியே மேற்குநோக்கி விரைந்து நடந்தாள். சேரநாடாகிய சிறந்த மலையாளநாட்டை அடைந்தாள். அங்குள்ள நெடுவேள் குன்றமாகிய திருச்செங்கோட்டு மலைமேல் ஏறினாள். ஆங்குள்ள வேங்கைமரம் ஒன்றின்