பக்கம்:கண்ணகிக் கதை.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கண்ணகி கதை

ஏழ்பிறப் படியோம் வாழ்க! நின்கொற்றமென்றார்
வாழ்மலையிற் கண்ட காட்சி வகுத்துரைத்தார்
அப்பொழு தங்கிருந்த வணிகர் அரும்புலவர்
செப்பரும் சீத்தலைச் சாத்தனார் தமிழ்ப்புலவர்
கண்ணகி வரலாற்றைப் பண்ணுற மொழிந்திட்டார்
மன்னன் பாண்டியனின் துன்னிய கொடுங்கோன்மை
உன்றனக் குரைப்பாள்போல் உற்றனள் இந்நாட்டை
நன்றுநின் கொற்றம் ஞானம் சிறப்பதாக!

வசனம்

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனராகிய செந்தமிழ்ப் புலவர், மதுரையில் தாம் இருந்த போது நடந்த கண்ணகி பற்றிய செய்திகளை எல்லாம் கண்ணாரக் கண்டவர். ஆதலாலே கண்ணாரக் கண்டும் காதாரக் கேட்டும் அறிந்த செய்திகளையெல்லாம் சேரமன்னனுக்குத் தீரத்தெளியக் கூறி முடித்தார். அதுகேட்ட சேரன் செங்குட்டுவன் பெருத்த வருத்தமுற்றான்.

பாட்டு

எம்மைப்போல் அரசர்களின்
ஏற்றமுறு செவிகளிலே
செம்மையின் வழுவியசொல்
சேர்வதற்கு முன்னாலே
தன்னுயிரை நீக்கிவிட்டான்
தகவார்ந்த பாண்டியனும்
முன்னைவினை,செங்கோலை
முன்னியே வளைத்ததையா
வினைவளைத்த செங்கோலை
வேந்தனுயிர் நிமிர்த்ததையா
இனையபெரும் அரசாட்சி
   இன்பமன்று துன்பமையா