பக்கம்:கண்ணகிக் கதை.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 கண்ணகி கதை

இத்தரை வாழ்பவர்கள் இனிது தெரியவேண்டும் ஆதலின் காதலுடன் அரியதமிழ் நூலிசைப்பேன் பூதலம் உள்ளவரை புகழும்நூல் தானிசைப்பேன் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்திடுவர் அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றமாகும் ஊழ்வினை உருத்துவந்து உறுபயனை யூட்டிவிடும் ஆழ்ந்த இம் மூன்றுண்மை அறிந்திடக் காட்டுவேன் சிலம்பே காரணமாய்ச் சிறந்த திருக்கதையைச் சிலப்பதி காரமென்றே செந்தமிழில் ஆக்கிடுவேன் இங்ஙனம் கூறியவர் இனியதமிழ் நூல் தந்தார் அங்கவர் தந்தநூலே அரியசிலப் பதிகாரம் சிலப்பதி காரமது செந்தமிழ்க்கு மணியாரம் உலப்பிலா னந்தமையா! உயர்ந்ததெள் ளமுதமையா! வாழியவே! தமிழ்நாடு, வாழியவே! புலவரெல்லாம் வாழியவே! இளங்கோவும், வாழியே! அவர்நூலும் வாழியவே! கண்ணகிபேர், வாழியவே! கற்புடையோர் வாழியவே! இக்கதையைக் கேட்டவர்கள் வாழியவே! கற்பரசி நற்கதையைக் கற்றவர்கள் வாழியவே! பொற்புடைய கண்ணகியைப் போற்றியவர் வாழியவே! விற்பனர் இளங்கோவை விரும்பியவர் வாழியவே! அற்புதச் சரிதமிதை ஆய்ந்தவர்கள் வாழியவே!