கண்ணகி கதை
9
வாழ்ந்தவர். கண்ணகியின் அருஞ்செயல்களை நேரில்கண்ட மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் வாயிலாகச் செய்திகளை நன்றாகத்தெரிந்து நற்றமிழ்க் காவியம் பாடியவர். இந்தக் காவியத்தின் இனிமையை நன்றாகக் கண்ட பாரதியார்,
"நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரம்என் றோர்மணி
<poem>"தேனிலே ஊறிய செந்தமிழின்சுவை
தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளள வும் நிதம்
ஒதி யுணர்ந்தின் புறுவோமே”
என்று தமது அனுபவத்தை அழகுறக் கூறினார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை.
இத்தகைய சிலப்பதிகாரக் காவியத்தின் போக்கை யொட்டி, இளங்கோவடிகளின் இனிய வாக்கையும் நோக்கையும் பின்பற்றிக் கண்ணகியின் கதையைச் சொல்லப் போகிறோம்.
பாட்டு
காவிரி யாறு பாயும் நாடு
பூவிரி சோலை சூழும் காடு பாவலர் பல்லோர் வாழும் நாடு
நாவலர் என்றும் ஏத்தும் நாடு புறவுக்குடலை யரிந்து துலையில் புக்க வன்சிபி யாண்டநாடு குறைவு நீதிக் கெனமகன் மேலே
கொற்ற வன்தேர் விட்டநாடு