பக்கம்:கண்ணகி தேவி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

கண்ணகி தேவி

பற்றிக் காகந்தி எனவும் பெயர் பெறும், இது சோழ மன்னர் பரம்பரையாய் முடி சூடி வீற்றிருக்கும் தலை நகராகவும், சிறந்த துறைமுகப்பட்டினமாகவும் விளங்க முற்றிருந்தது.

இந்நகர், புறநகர் அகநகர் என இரு பிரிவாய் அமைந்திருந்தது. புறநகர் மருவூர்ப்பாக்கம் எனவும் அகநகர் பட்டினப் பாக்கம் எனவும் பெயர் பெறும். புறநகரில் நிலா முற்றங்களும் மான்கண் சாளரங்களும் அமைந்த மாடங்கள் சோலைகளுக்கிடையே ஆங்காங்கு விளங்கிக்கொண்டிருக்கும். கூலவீதிகளில் நெல் முதலிய தானியங்களும், கடை வீதியில் முத்து, பவளம் முதலிய இரத்தின வகைகளும், பொன், பொற்பணி முதலியவைகளும், பட்டாடை முதலிய ஆடைவகைகளும் இவ்வளவென்று கணிக்கமுடியாத அளவு குவித்தும், தொகுத்தும் வைக்கப்பட்டிருக்கும். பூ, ஆரம், முகவாசம், சக்தனம், அகில் முதலிய வாசனைப் பொருள்கள் விற்பார் வீதிதோறும் திரிவர். பட்டினாலும் பருத்தியாலும் எலி மயிராலும் ஆடை, கம்பளங்கள் நெய்யும் காருகர்களும், கொல்லர், தச்சர், கன்னார், சிற்பிகள், சித்திரகாரிகள் முதலிய தொழின்மாக்களும் வசிக்கும் வீதிகள் ஒரு பக்கத்திலிருக்கும்; பாணர், சிற்பியர், செம்மார், மீன்விலைஞர், உப்பு வாணிகர் முதலியோர் இருப்புக்களும் மற்றொரு பக்கமிருக்கும். அலைவாய்க்கரைகளில் வியாபாரத்தின் பொருட்டு மரக்கலங்களில் வந்திறங்கிய யவனர் (கிரேக்கர், ரோமர், எகிப்தியர்) என்னும் பரதேசிகளது சேரிகள் தனியாகச் செல்வத்தாற் சிறந்திருக்கும். சோழனது புலி முத்திரையிட்ட பொதிகளும், மூடைகளும் குவிந்து கிடக்கும் சுங்கச் சாலையும் (Custom House), கப்பல்களை அழைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/10&oldid=1407959" இலிருந்து மீள்விக்கப்பட்டது