கண்ணகி தேவி
3
கலங்கரை விளக்கமும் (தீபஸ்தம்பம்-Light House) கடற்றுறையில் அழகுடன் விளங்கும்.
அகநகரின் நடுவே அரசவீதி விழா விதிகளில், அரச மாளிகைகளும் அவற்றைச் சூழப் புரோகிதர், அந்தணர், மந்திரிகள், மருத்துவர், சேனதிபதிகள் முதலியோர் இருப்புக்களும், அறங்கூறும் அவையங்களும் (நியாய ஸ்தலம்) விளக்கமுற்றிருக்கும். இவற்றை அடுத்து ஆவண விதிகளும், அருகில் வணிகர், வேளாளர், கோபாலர் முதலியோர் இல்லங்களும் சூழவிருக்கும். ஒரு பக்தலில் நாடகக் கணிகையர் வீடுகளும் இசைக்கருவியாளர் உறைவிடங்களும் காணப்படும். சூதர், மாகதர், சோதிடர் முதலியோரும் சில இடங்களில் வாழ்ந்தனர். ஆறு கிடந்தது போன்ற வீதிகளில் யானை, குதிரை, தேர் முதலியன இடைவிடாது சஞ்சரித்துக்கொண்டிருக்குமாதலால், மனிதர்கள் கவனமாகச் செல்லவேண்டியிருக்கும். அகநகர்க்கும், புறநகர்க்கும் இடையிலுள்ள பொதுவிடம் ‘நாளங்காடி’ என்று சொல்லப்படும். அதில், பகற்காலத்தில் பெரிய கடைகள் கூடும்; பண்டங்களை விற்போர் ஓசையும், கொள்வோர் ஓசையும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கும். அவ்விடத்தில் அற்புதம் நிறைந்த பல வகை மன்றங்களும், மண்டபங்களும் உண்டு. பழமரங்களும், பூஞ்செடி வகைகளும் நிழலுக்கும் அழகுக்கும் நிரைநிரையாக வளர்க்கப் பெற்றிருக்கும்.
நகரத்தில் திருமால் கோயிலும், பலதேவன் கோயிலும், சிவன் கோயிலும், வாசவன் கோயிலும், வச்சிரக் கோட்டமும், குமரகோட்டமும், அருகன் கோயிலும், புத்த விகாரமுமாகிய தேவாலயங்கள், ஆங்காங்குச் சிறு சிறு குன்றுகள் போல விளங்கித் கொண்டிருக்கும். வித்தியா மண்டபங்களில் துறவிகளும் பண்டிதர்களும் புராணங்கள் படித்தும், வாதங்-