கண்ணகி தேவி
7
துக்கொண்டு, அங்கேயே வாழ்வானாயினான், கோவலனுக்கு மாதவி வயிற்றில் மணிமேகலை என ஒரு மகளும் பிறந்தாள். இக்காலத்தில் இவன் செய்த புண்ணிய தானங்களும், பிறர்க்குச் செய்த உபகாரங்களும் பல.
கண்ணகியோ, கவினழிந்து தனது ஆருயிர்க்காதலன் பிரிவினால் வருந்தி, அவ்வருத்தம் வெளியில் புலப்படாது மறைத்துக் கணவன் மீது சிறிதேனும் வெறுப்பின்றி, மாமன் மாமியருக்குச் செய்யவேண்டி பணிகளை வழுவாது செய்துகொண்டிருந்தாள்.
இந்திர விழா:
இவ்வாறு கோவலன் கண்ணகியைப்பிரிந்து மாதவியோடு மருவி வாழ்ந்து வருங்காலத்தில், புகார் நகரில் முன்பு அரசாண்ட தூங்கெயிலெறிந்த தொடித் தோட்செம்பியன் முதலாகப் பல சோழர்களாற்பரம்பரையாய் நடத்தப்பெற்று வருவதாகிய இந்திர விழாவை நடத்தும் காலமாகிய சித்திரா பௌர்ணமி வந்தது. அந்நாளில் பல சமயவாதிகளும் அரசன் அவையோரும் ஒருங்கு கூடி, “நாம் இந்திர விழாவை நடத்தாவிடின் முசுகுந்தனது துயரத்தைத் தீர்த்த நாளங்காடிப்பூதம் நகரமக்களுக்குத் துன்பத்தை உண்டாக்கும்; பாவிகளைப்பாசத்தாற்கட்டிப்படைத்துண்னும் சதுக்க பூதம் நகரை விட்டு நீங்கிவிடும். ஆதலால், நாம் விழாவை வழக்கம்போல நடத்துவோமாக!” என்று பேசி முடிவிட்டார்கள். பின்னர் விழா நடக்கப்போவதை முரசறைந்து நகரினர்க்குத் தெரிவிக்குமாறு வள்ளுவனுக்குக்கட்டளையிட்டனர். அவன் வச்சிரக்கோட்டத்திலுள்ள மங்கலமுரசை எடுத்து யானைப் பிடர்த்தலை ஏற்றி, இந்திரனது வாகனமாகிய ஐராவதம்நிற்கும் கோவில்வாயிலிற்சென்று விழாவின் தொடக்கமும் முடிவும் சாற்றி, வீதியிற்