பக்கம்:கண்ணகி தேவி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

9

விதி முறை வழுவாது விழாச் செய்தனர். நகரத்தார் விழாக் களிப்பால் விண்ணவரே போல வீறு பெற்று விளங்கினர்.

திருவிழாவுக்குக் கொடியேறிய நாள் முதல் இருபத்தெட்டு நாட்கள் விழா, பலவிதக்காட்சியுடன் நடைபெற்றது. விழா முடிவில் பெளர்ணமித் திதியன்று நகரத்தார் அனைவரும் தத்தம் பரிவாரங்களுடன் கடலாடுதற்கு வழக்கப்படி கடற்கரை சென்றார்கள். கண்ணகி கவலைக்கடலுள் மூழ்கிக் கிடந்தாள். விழாக்காலங்களில் பலரது முன்னிலையில் மாதவி, ஆடல்பாடல்களைச் செய்வது, கோவலனுக்கு வெறுப்பைத் தந்துகொண்டிருந்தது. இதனேக்குறிப் பாலறிந்த மாதவி, பல வகை உபாயங்களால் கோவலனைச் சமாதானம் செய்துகொண்டிருந்தவள், தானும் கடல் விளையாட்டைக் காணுதற்கு விரும்பினாள். கோவலன் அவளை அழைத்துக்கொண்டு விளையாட்டுமகளிருடன் வைகறையில்கடற்கரையை அடைந்து, தாழையே வேலியாகச் சூழ்ந்த ஓரிடத்தின் நடுவிலிருந்த புன்னை மரத்தின் நிழலில் நல்ல மணற் பரப்பில் சித்திரத் திரையை வளைத்து, மேற்கட்டும் கட்டி, அதன்கீழ் இட்டதந்தக்கட்டிலில் மாதவியுடன் இருந்தான். அதன் பின் மாதவி, பக்கத்தில் நின்ற வசந்தமாலை என்னும் தோழி கையிலிருந்த வீணையை வாங்கி, அதன் நரம்புகளை முறுக்கித் தனது மெல்லிய விரலால் தடவிச் சுரங்களை எழுப்பிச் செவியால் ஊன்றிக் கேட்டுணர்ந்து, யாழைத்திருத்தித் தான் வாசியாமல் கோவலன் கையில் கொடுத்தாள். கோவலன் அதனை வாங்கி ஆற்று வரி, கானல் வரி என்கின்ற இசைப்பாட்டுக்களைக் கண்டத்தாற்பாடிக் கொண்டு வீணையை இனிமையாய் வாசித்தான்.

இங்ஙனம் கோவலன் பாடி வாசித்த பாட்டுக்களைக்கேட்ட மாகவி, அப்பாட்டுக்கள் அகப்பொருட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/17&oldid=1411043" இலிருந்து மீள்விக்கப்பட்டது