உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகி தேவி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

11


இவை இங்கனமாக, கண்ணகிக்குத் தேவந்தி என்னும் பார்ப்பனத்தோழி ஒருத்தியிருந்தாள்.அவள் இளமையில் கண்ணகியின் தங்தை மாநாய்கன் மனையில் உடன் வளர்ந்தவள். அவள் கண்ணகிக்குக் கணவன் பிரிவால் நேர்ந்த துன்பத்தை உணர்ந்து வருக்தியவளாதலின், ஒருநாள் மிக்க வருத்தம் உடையவளாய்த் தான் தினந்தோறும் சென்று வழிபட்டு வரும் பாசண்டச்சாத்தன் கோயிலுக்குச் சென்று, அறுகு, சிறுபூளைப்பூ, கெல் முதலியவற்றைத் தூவித் தொழுது, "கண்ணகி விரைவில் கணவனைப் பெறல் வேண்டும்!" எனப் பிரார்த்தித்துப் பின்பு கண்ணகியிடம் சென்று அவளை நோக்கி, “நீ உன் கணவரைப் பெறுவாயாக!” என்றாள்.

இதனைக்கேட்ட கண்ணகி, "தோழி, உன் ஆசி பொய்க்காது; நான் என் கணவரைப் பெறுவேன்; ஆயினும், நேற்றிரவு கான் கண்ட கனாவினால், என் நெஞ்சம் ஐயமுறுகின்றது! அதனேக்கேள் : கனவின் கண் கணவர் என் கையைப்பற்றி இவ்வூரை விட்டு அழைத்துப்போக, யாங்கள் ஒரு பெரிய நகரில் புகுந்தோம்; அங்கனம் புகுந்த நகரிடத்தில் எங்கட்கு ஏலாததாரு படிற்றுரையை (பொய்ப்பழிச் சொல்லை) இடுதேள் இடுமாறுபோல, (பொய்த்தேளை மேலே வைத்தல்) அவ்வூரார் எம்மேல் இட்டனர்; அப்பழியால் கோவலர்க்கு ஒரு தீங்கு நேர்ந்ததென்று சிலர் சொல்லக்கேட்டு, அதுபொறாமல், ஆண்மக்கள் முன்னர்ச் செல்லாதேன், அவ்வூர் அரசன் முன் சென்று, வழக்குரைத்தேன். ஆதலால், அவ்வரசனேடு அவ்வூர்க்கும் உற்றதோர் தீங்குண்டு; பின்னர் நிகழ்ந்த கனா தீக்கனவாதலின், அதனை உனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/19&oldid=1411047" இலிருந்து மீள்விக்கப்பட்டது