பக்கம்:கண்ணகி தேவி.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணகி தேவி

13

ளிடம் அணுகி, "கோவலர் தமது தலை வாயிலில் வந்துள்ளார்," என்றனள். அவ்வளவிலே கோவலன் உட்புகுந்தான். கண்ணகி தொழுதாள். கண்ணகியுடன் அவன் பள்ளியறையுட்சென்று, அவளது வாடிய மேனியையும் நெஞ்சின் வருத்தத்தையுங் கண்டு வருந்தி, "எல்லோரிடத்தும் பொய்யை மெய்யாகக் காட்டியொழுகும் மாயப்பரத்தையோடு மருவி வாழ்ந்த காரணத்தால், நம் முன்னோர் நெடுங்காலமாய்த் தேடிவைத்த மிகுந்த செல்வத்தையெல்லாம் தொலைத்து வறுமையுற்றேன்; இவ்வறுமை, எனக்கு மிக்க நாணத்தைத் தருகின்றது," என்றான். கண்ணகி, "மாதவிக்குக் கொடுக்கப் பொருளில்லாமை பற்றியே இங்கனம் தளர்ந்து கூறுகின்றார்,” எனக் கருதிப் புன்முறுவல் பூத்து, கோவலனை வணங்கி, "என்னிடம் இன்னும் இரண்டு சிலம்புகள் உள்ளன; அவற்றை எடுத்துக்கொள்க,” என்று சொன்னாள். அதற்குக் கோவலன், நீ சொன்ன இச்சிலம்பை நான் வாணிப முதலாகக்கொண்டு, மதுரை சென்று, இது காறும் அழித்த அணிகலன்களையும் பொருள்களையும் ஈட்டக் கருதுகின்றேன்; கண்ணகி, நீயும் என்னுடன் புறப்பட்டு வைகறையில் வருதல் வேண்டும்." எனக் கூறினான். கண்ணகியும் உவப்புடன் உடன் பட்டிருந்தனள்.

வழிச் செலவு :

தீவினை செலுத்துதலால் இடையாமம் கழிந்து வைகறைப் பொழுதில், கோவலனும் கண்ணகியும் எழுந்து, காவலர் அறியாது இடைகழி வாயிலைக் கடந்து புறப்பட்டனர். புறப்பட்டவர்கள், திருமால் கோயிலை அடைந்து, வலஞ்செய்து தொழுது, புத்த விகாரங்களையும், அருகன் கோவில் சிலாதலங்களேயும் வணங்கி, நகரின் பெருவாயிலையுங் கடந்து, இலவந்திகை மதிலுக்குப் புறத்திற்சென்று, காவிரியின் வடகரைச் சோலை வழியாக மேற்கு நோக்கி ஒரு காத