பக்கம்:கண்ணகி தேவி.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

19

காட்டு வழியாய் இருக்கும்; அவ்வழியைக் கடந்தால், அழகர் மலை எதிர்ப்படும். அம்மலையின் பிலவழியில் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி என்ற மூன்று பொய்கைகள் உண்டு. அவற்றில்மூழ்குவோர், முறையே இலக்கண நூல் அறிவையும், பூர்வ ஜன்ம உணர்ச்சியையும், விரும்பியவற்றையும் பெறுவார்கள். அவற்றில் சென்று மூழ்க உங்களுக்கு விருப்பமில்லையெனில், அழகருடைய திருவடியை நினைந்து ஆலயத்தின் கருட ஸ்தம்பத்தையேனும் தரி சித்து, மனத்துள் இன்பங்கொண்டு, பின்பு நீங்கள் மதுரையை அடையுங்கள்.

“இடைப்பட்ட வழி செவ்விய வழியே. வழியில் சோலைகள் சூழ்ந்தஊர்கள்பலஉண்டு;இடையிடையே காடுகளும் உண்டு. இக்காட்டு வழியைக்கடந்து செல்லுங்கால் ஓரிடத்து வனதெய்வம் ஒன்று உள்ளது; அது வருத்துந் தன்மையுடையது முதலில், வழிப் போவாரை நயமாகப்பேசி வஞ்சித்துப்போகவிடாது தடுக்க முயலும். அதன் வசப்படாது தப்பிச் சென்றால், மதுரைக்குச் செல்லும் பெருவழியை அடையலாம்; இம்மூன்று வழிகளுள் உமக்கு விருப்பமான வழியைப் பின்பற்றிச் செல்லுங்கள். நான் திருவரங்கப்பெருமானது சேவடி காணச் செல்கின்றேன்,” என்று சொன்னான். இங்ங்ணம் மறையவன் கூறிய தைக் கேட்ட கவுந்தியடிகள், “நான்மறையாள, நீ கூறிய முப்பெரும்பொய்கைகளில் மூழ்கி அப்பயன்களை நாங்கள் அடையவேண்டா ; ஐந்திர வியாகர ணத்தை எங்கள் அருக குமரன் அருளிச்செய்த பரம ஆகமத்திற்காணலாம்; முற்பிறப்பிற் செய்தவற்றை யெல்லாம் இப்பிறப்பின் அநுபவத்தால் அறியலாம்; வாய்மையும் கொல்லாவிரதமும் உடையவர், விரும்பியனவெல்லாம் அடையலாம்; வணங்க விரும்பிய தெய்வத்தைக் காணுதற்குச் செல்வாயாக; நாங்கள் எங்கட்கு ஏற்ற வழியே போகின்றோம்,” என்று