20
கண்ணகி தேவி
சொல்ல, மூவரும் புறப்பட்டு இன்று அணித்தேயிருந்த ஓர் ஊரில் தங்கினர்.
மற்றைநாட்காலையில் அவர்கள் அந்தணன் சொன்ன வழி மூன்றனுள் நடுவழியைப்பற்றிப் புறப்பட்டுச் சென்றனர். செல்லுங்கால் வழி நடையால் கால் தளர்ந்து நீர் வேட்கையுற்று ஓரிடத்துத் தங்கினர். கோவலன், தண்ணீர் கொண்டு வர, ஒரு தடாகத்தைக் கண்டு அதன் துறையில் நின்றான். நிற்கும் பொழுது அக்கானகத்துத் தேவதை, மாதவியின் தோழியாகிய வசந்தமாலை போல் வடிவங்கொண்டு கோவலனது அடியில் வீழ்ந்து வணங்கி, பொய்க்கண்ணீர் உகுத்து, “ஐய, மாதவி கொடுத்த ஓலையை தான் உம்மிடம் கொடுக்க நீர் மறுத்த செய்தியைப் பின்னர் அவளிடம் உரைத்த போது அவள் நான் மாலை வெண்தோட்டில் எழுதிய ஓலைப் பாசுரத்தில் தவறு ஒரு சிறிதுமில்லை; ‘நீ பேசிய சொற்களே கோவலர்க்குக் கோபமூட்டின போலும்! அதனாலன்றோ கோவலர் வாராது கொடுமை செய்து விட்டார் ?’ என்று கூறி மயங்கி வீழ்ந்து பின்னை எழுந்து, 'கணிகையர் வாழ்க்கை கடையே போலும்!' என்று தன்னை வெறுத்துப் பேசிக் கண்ணீர் சொரிந்து, முத்து வடத்தை அறுத்தெறிந்து, ஒருநாளும் பிரியாத என்னைத் துரத்திவிட்டாள் ; நீர் மதுரைக்குச் செல்வதை வழியில் எதிர்ப்பட்டோர் சொல்லக் கேட்டு, வணிகர் கூட்டத்தோடு இக்காட்டுவழி வந்து துயருழந்தேன்; இத்துயருழந்த அடியாளுக்கு என்ன நற்சொல் அருளுகின்றீர்?” என்று விநயமாகக் கேட்டது.
இவ்விதம் இயக்கியாகிய தெய்வம் நடித்துப் பேசியதைக் கேட்ட கோவலன், ஆராய்ந்து, 'ஓ! முன் வழிப் போவாரை மயக்கும் வன தெய்வம் இவ்வழியிலுள்ளது என்றுமறையவன் சொன்னானன்றோ?' அத்தெய்வமே போலும் இவள்! உண்மையை நன்றா-