கண்ணகி தேவி
21
கத் தெளிய, அக்தரி மந்திரத்தை உருவிட்டுப் பார்க்கிறேன்.” என்று அம்மந்திரத்தை உருவிட்டான். இதையறிந்து பயந்த வனதேய்வம், ஐய, நான் வசந்தமாலையல்லேன்; இவ்வனத்தில் திரியும் இயக்கி: உன் மீது விருப்பங்கொண்டு இங்கினம் மயக்கக்கருதினேன் ; நான் செய்த இப்பெரும்பிழையை நீ பொறுப்பதோடு கற்புடையதெய்வமாகிய கண்ணகிக்கும் மாதவத்தாட்டியாம் கவுக்தியடிகளுக்கும் தெரிவிக்காமலிருக்க வேண்டும்; அவர்கள் சாபம் என்னால் தாங்கவொண்ணாது,” என்று இரந்து கேட்டுத் தனதிருப்பிடம் சென்றது.
பின்பு கோவலன் ஒரு தாமரை இலையில் தண்ணீர் மொண்டுகொண்டு வந்து கண்ணகிக்குக் கொடுத்து விடாய் தணித்தான். சூரிய வெப்பம் கடுகுதலால், இனிச் செல்லுதல் முடியாதென்று கருதிக் கவுந்தி யடிகள், இருவரையும் அழைத்துப் போய் அங்குள்ள ஐயைகோட்டம் (காளி கோயில்) அடைந்தாள். கண்ணகி மெய் வருக்தி அடிகள் கொப்புளங் கொண்டு தளர்நடையோடு பெருமூச்செறிதலால், அவர்கள் அன்று மேற்செல்லாராய்க் கோட்டத்திலேயே ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.
அன்று தினம் வேடர்கள், கொற்றவைக்குப் புலியிட்டுத் திருவிழாச் செய்தார்கள். தேவராட்டி ஒருத்தி, ஆவேசங்கொண்டு, அடி பெயர்த்தாடினாள். ஆடிய அவள், கண்ணகியை நோக்கி,
“கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணி”