பக்கம்:கண்ணகி தேவி.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கண்ணகி தேவி

எனக் கண்ணகிக்கு இனி நிகழப் போகின்றவற்றைக் கூறினள். இங்கனம் தன்னைப் புகழ்ந்து கூறியதைப் பொறாத கண்ணகி, 'இவள் தெய்வ மயக்கத்தால் இங்ஙனம் கூறினாள்,' எனக் கருதி, நாணமுற்றுக் கணவனது பின் புறத்தே மறைந்து சிறுநகை செய்து நின்றாள்.

அப்பால் கோவலன் கவுந்தியைத் தொழுது, “பாண்டியனது செங்கோல் நலத்தால் இவ்வழியில் வனசரங்களாலும், ஜலசரங்களாலும் நமக்கு எவ்விதத் துன்பங்களும் உண்டாகா. இக்காட்டில் நம்மை வருத்துவது இவ்வேனிற்காலத்து வெயில் ஒன்றே: கண்ணகி, பாவம்! வெயில் மெய்யிற் படப் பொறாள்! இவள் சீறடி பருக்கைக் கற்களில் படியப் பொறா. ஆதலால், இனி இரவில் வழி கடப்பதே நன்று." என்று விண்ணப்பித்தான். அதற்குக் கவுந்தி உடன்பட்டாள் சூரியன் மறைந்த பின், மூவரும் நிலாத் தோற்றத்தை எதிர் நோக்கி இருந்தனர்.

நிலா உதயமானவுடன், கோவலன் கண்ணகியைப் பார்த்து, மிருகங்களின் முழக்கத்துக்கும் பறவைகளின் ஒவிகளுக்கும் அஞ்சாமல் வருக, என்று சொல்லி, அவள் கையைத் தன் தோளில் சேர்த்துச் சென்றான். இருவரும் கவுந்தியின் அறவுரைகளைக் கேட்டுக்கொண்டே வழி வருத்தமின்றிப் பொழுது புலரும் அளவும் கடந்து, ஒரு பார்ப்பனச் சேரியை அடைந்தனர். அங்குள்ள பார்ப்பனர்கள் தங்களுக்குரிய வேதம் ஒதுதலைத் தவிர்த்து வரிப்பாட்டைப் பாடிப் பொழுது போக்கும் இழிந்த ஒழுக்கமுடையவர்களாயிருந்தபடியால், அவர்களது ஊர்க்குட்செல்லாது பக்கத்தில் ஓரிடத்தில் கண்ணகியையும், கவுந்தி