பக்கம்:கண்ணகி தேவி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கண்ணகி தேவி

லற்றுக் கிடக்கின்றது. உன் காதற்குரிய மாதவியோ, வசந்தமாலை மூலம் நீ திருமுகம் மறுத்தது முதல், மஞ்சத்தில் துஞ்சினாளே போலக் கிடக்கின்றாள். இந்த நிலையில் நான் மாதவியைப் பார்க்கச் சென்றேன். அவள் என்னே நோக்கி, ‘உமது இணையடி தொழுதேன். இத்துயர் தீர்க்க,’ என்று சொல்லி அப்போதே ஒரு திருமுகம் எழுதி, என் கண்மணி போல்வாருக்குக் காட்டுக!' என்று என் கையிற்கொடுத்தாள். நான் அதனைக்கொண்டு திசையெல்லாம் தேடித்திரிந்தும் உன்னைக் காணாமல் பல இடங்களும் சுற்றி அலைந்தேன்,' என்று சொல்லி, ‘அவ்வோலை இது’ என நீட்டினன். அவ்வோலேயின் மடிப்புறம் மாதவியின் புழுகு நெய் பூசிய கூந்தல் முத்திரையிட்ட மண்ணுடன் கூடியதாயிருந்தமையால், அதனைப் பிரித்து விட மனமில்லாதவனாய்ப் பின்பு பிரித்துவாசித்தான். அதில் “அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேள்,” என்று தொடங்கி,

“வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் :
குரவர்பணி யன்றியும் குலப்பிறப் பாட்டியோ(டு)
இரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது,
கையறு கெஞ்சங் கடியல் வேணடும் :
பொய்தீர் காடசிப் புரையோய் ! போற்றி !”

என்று எழுதியிருந்தது. கோவலன் அதனைக் கண்ணுற்று மனங்குழைந்தான் ; “மாதவி யாதொரு பிழையும் செய்திலள்; இஃது என் தீவினைப் பயனே,” என்று சொல்லித் தளர்ச்சி யொழிந்தான். பின் அவன் கெளசிகனை நோக்கி, “இவ்வோலையை என் தந்தை யார்க்கு யானெழுதும் ஒலை போலவும் ஏற்ற சொற்களும் பொருளும் பொருந்திக் காணப்படுகின்றது; என் பெற்றோரைத் திசைநோக்கித் தொழுகின்றேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/32&oldid=1410965" இலிருந்து மீள்விக்கப்பட்டது