கண்ணகி தேவி
27
ஏரியும் பண்ணையும் கழனியும் சூழ்ந்து, தபோதனர் பள்ளிகளுடன் விளங்கும்.
இப்புறஞ்சேரியில் முனிவர் பள்ளியுள் கவுந்தியுடன் தங்கிய கோவலன் கவுந்தியடிகளைக் கைதொழுது, “தவத்தீர், ஒழுக்கமுடைய விழுக்குடியிற் பிறந்தவர்கள் மகளிரோடு நீண்டவழி நடவார் என்று பெரியோர் கூறுவர்; அங்ஙனமாகவும் நான் என் மனைவி மிகுந்த துன்பமுறும்படி முன்பு கனவிலும் நினைத்தறியாத தேசத்தில் அருவழி நடந்து திரிந்து துன்பமுழந்து சிறுமையுற்றேனே! இத்துன்பம்யான் அடைதற்கு என்ன பாவம் செய்தேனோ! அடிகளே, இனி நான் வந்த காரியத்தைச் செய்தற்கு மதுரையினுட்சென்று அங்குள்ள வணிகர்க்கு என்னிலைமையைத் தெரிவித்து வரக் கருதுகிறேன்; தங்கள் பாதுகாப்பில் இருக்கும் இவட்கு இனி ஏதமும் உண்டோ? விடையருள்க” என்று விண்ணப்பித்துநின்றான். அது கேட்ட கவுந்தி, “ஐய, கவலற்க. நீ முற்பிறப்பில் நல்வினையை மிகச் செய்து பின்பு சிறிது தீவினையும் செய்தாயாதலால் உன் சுற்றத்தாரையும் தந்தையின் செல்வத்தையும் விட்டுக் காதலியோடு தனித்துத்துயரடைந்தாய். தீவினை, தவறாது தன் பயனை ஊட்டுமாதலால் அதற்கு இரங்குதல் அறிவுடைமையாகாது. இத்தகைய துன்பமுற்றோர் முன்னரும் எத்தனையோ பேர் உண்டு. காதலியைக் கானகத்தே கைவிட்டு வருக்தியநளன், இராமன் முதலியோர் துன்பத்தினும் காதலியைப் பிரியாது வாழும் வாழ்க்கையைப்பெற்ற உன் துன்பம் பெரிதன்றே!” என்று சொல்லிக் கோவலனைத் தேற்றினாள்.
இவ்வாறு கவுந்தி அம்மையால் தேற்றப்பட்ட கோவலன் விடை பெற்று, வாளேந்திய யவனர்கள்