பக்கம்:கண்ணகி தேவி.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கண்ணகி தேவி


பாசத்தில் புகுந்து, ‘பூதநாதனே, உனக்கு உணவாக என்னுயிரைக்கொண்டு அந்த ஏழை உயிரை விடுக,’ என இரந்தாய்; பூதம்

நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி விழக்கும பண்புஈங் கில்லை.

‘ஆதலால், நீ இங்ஙனம் வேண்டற்க’ என்று சொல்லி, உன் முன்னே அவனைப் புடைத்துத் தின்ன, அதனைப் பொறாத அவன் தாய்கொண்ட சோகத்தை நீ தவிர்த்து, அவள் சாகுமளவும் அவளைப் பசிப்பிணி தீர்த்துப் பாதுகாத்தாய்.

"இவ்வாறு நீ இப்பிறப்பில் பண்ணியவையெல்லாம் புண்ணிய தானங்களாகிய நல்வினையாகவே யிருக்கவும், உனது இத்துன்பத்துக்குக் காரணம், முற்பிறப்பின் தீவினையே போலும்!” என்று கூறி இரங்கினான்.

அவனை நோக்கிக் கோவலன், “ஐயரே, நான் சொல்வதைக் கேளும்: ஒரு கீழ்மகனால், இந்நகரில் கண்ணகி துயரமுற நான் உடுத்திய ஆடை பிறரால் கவரப்பட்டு, ஓர் எருமைக்கடாவின்மீது ஏறவும், தவசிகள் பெறும் மோக்‌ஷத்தை இவளோடு நான் பெறவும், மணிமேகலையை மாதவி புத்ததேவரிடம் ஒப்புவிக்கவும் இன்றிரவு வைகறையில் ஒர் கனவு கண்டேன். அது விடியற்காலத்துக் கனவாகவின், தப்பாது பலிக்குமோ என அஞ்சுகின்றேன்!” என்றான். மாடலனும் கவுந்தியும் அதனைக்கேட்டு, 'இத்தவப் பள்ளியில் இல்லறத்தோர் இருத்தல் பொருந்தாது. உன் தந்தையின் பெயர் சொன்னால் உன்னே உபசரிப்பார் பலர் இந்நகர வணிகருள் இருப்பர்; இன்று பொழுது மறையுமுன் மனைவியுடன் நீ மதுரை நகர்க்குள் சென்றுவிடு," என்றனள்.