பக்கம்:கண்ணகி தேவி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணகி தேவி

37

வீட்டினின்றும் பறப்பட்டான். கண்ணகியை விட்டும் பிரியமாட்டாமையால் மனஞ்சுழன்று வருந்தி, நடக்க மாட்டாது நடந்து தெருவில் சென்றான். இவ்வாறு கோவலன் செல்லுகையில், அவனை ஓர் எருது பாய வந்தது. கோவலராயின், அதனைத் தீநிமித்தம் என் அறிந்து செல்லாமல் மீள்வர். கோவலன் அதனை ஆராயாது, தாதெரு மன்றங்களைக் கடந்து, தனித்தெருவின் நடுவே போய்க் கடை வீதியை அடைந்தான்.

கோவலன் கொலையுண்டது :

கோவலன் சிலம்பு விற்கக் கடை வீதியிற் செல்லுங்கால் உருக்குத் தட்டாரும் பணித்தட்டாருமாகிய தட்டார் பலர் தன் பின் வர, அரச வரிசையாகிய சட்டையை அணிந்து, கையில் பற்றுக்கொடிறு பிடித்து, ஒதுங்கி நடக்கும் பொற்கொல்லன் ஒருவன் எதிர்ப்பட்டான். கோவலன் அவனைக் கண்டு, 'இவன் பாண்டியனால் பெயரும் வரிசையும் பெற்ற பொற்கொல்லன் போலும்!' எனக்கருதி, அவனை அணும், "அரசன் தேவி அணிதற்கேற்ற சிலம்பொன்று உள்ளது; அதனை நீ விலை மதிக்க வல்லையோ?” என்று கேட்டான், பொற்கொல்லன், "யான் மகளிருடைய அடிக்கலம் விலை மதித்தற்கு அறியேனாயினும், வேந்தர்க்கு முடிக்கலம் முதலியன சமைப்பேன்," என்று தன் வன்மையை விநயத்தோடு வெளிப்படுத்திக் கோவலனைத் தொழுது புகழ்ந்தான். உடனே கோவலன், சிலம்பு பொதிந்திருந்த பொதி வாயை அவிழ்த்துக் காட்டினான். கால தூதனாய்க் கொல்ல வந்த கொல்லன், சிலம்பின் சித்திரத் தொழில் அருமைப்பாட்டையெல்லாம் கூர்ந்து பார்த்து, வஞ்சிக்க எண்ணங்கொண்டு, "ஐய, இவ்வுயர்ந்த விலைச் சிலம்பு, கோப்பெருந்தேவிக்கல்லது பிறர் வாங்குதற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/45&oldid=1410971" இலிருந்து மீள்விக்கப்பட்டது