பக்கம்:கண்ணகி தேவி.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கண்ணகி தேவி

நாம் காண முடியாவகை மாயமாய் மறைவர், தங்கள் தெய்வத்தைச் சிந்திப்பாராயின் கைப்பற்றிய பொருளை நமக்குக் காட்டியும் தப்புவர், மருந்தினால் மயக்குவிப்பாராயின், நாம் இருந்த இடத்தைவிட்டுப் பெயரவும் முடியாது. தங்களுக்குச் சரியான சகுனம் வாய்த்தாலன்றி எப்படிப்பட்ட பெரிய பொருளும் கைப்படுவதாயிருந்தாலும் புறப்படவே மாட்டார். களவு நூல் தந்திரங்களைக் கொள்வாராயின், மண்ணுலகத்திலிருந்தே விண்ணுலகத்து இந்திரன் மார்பின் ஆரத்தையும் பெறுவர். இந்தப்பொருளைக்கைப்பற்றுதற்கு இதுவே இடமெனத்துணிந்து காலமும் கருதிக் கருவிகளையும் உபயோகித்துப் பொருள்களைக் கைப்பற்றுவாராயின், இவ்வுலகில் இவர்களைக்கண்டு பிடிக்க வல்லார் யாவர்? இவர்களுக்கு இரவென்றும் பகலென்றும் இல்லை. இவர்களுக்குத் தப்பி வாழ்தல் எவர்க்கும் ஆகாது.

"இன்னும் உண்மையாக நடந்த ஒரு செய்தியைக் கேளுங்கள் : முன்னொருநாள் கள்வனொருவன் தூதர் உருவம் கொண்டு வந்து பகற்பொழுது அரண்மனை வாயிலில் தங்கியிருந்து, இராப்பொழுதில் மாதர் வடிவங்கொண்டு அரண்மனை புகுந்து, நமது அரசனாகிய நெடுஞ்செழியன் தம்பி துயில் கொண்டிருக்கும் பள்ளியறையை அணுகினான். அணுகியவன், விளக்கு நிழலில் மறைந்து மஞ்சத்தகுகிற் சென்று இளங்கோவின் மார்பில் பிரகாசிக்கும் வைரமாலையை எடுத்தான். உடனே இளங்கோ விழித்து, அவனை வெட்டுதற்கு உடைவாளை உறையினின்றும் உருவினான். கள்வன் உறையை விரைந்து வாங்கி, இளங்கோ குத்துந்தோறும் குத்துத் தன்மேற்படாது அவ்வுறையினுள்ளே செல்லும்படி உறையைச் செறித்தான். ஒன்றுங்கூற நாவெழாத அரசன் தம்பி, கள்வ-