பக்கம்:கண்ணகி தேவி.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணகி தேவி

41


னுடன் மற்போர் தொடங்க, கள்வன் ஆங்கு நின்ற தூணைத் தானாகக் காட்டிக் களவுநூற்கல்வியால் தப்பினான். அவனை இந்நாள்வரை கண்டார் உண்டாயின், சொல்லுங்கள் பார்ப்போம்!" என்று இவ்வாறு கூறி, "இனிக் காலம் தாழ்த்தாதீர்கள்” என்றான்.

இவற்றைக் கேட்டு நின்ற காவலாளிகளுள் ஒர் இளைஞன், "முன்னர் கூதிர்காலத்தில் ஒரு நாள் நள்ளிரவில் கன்னக்கோலோடு கரிய உடை தரித்து, கவ்விய ஊனை விடாத புலி போலக் கள்வன் ஒருவன் வந்து தோன்றினான். அப்போது காவல் செய்திருந்த நான் அவனை நெருங்கி என் வாளை உறையினின்றும் உருவினேன். இமைக்கு முன் அவன் வாளைப் பறித்தான்; அவனையும் என் வாளையும் இன்னமும் காணேன். ஆதலால், கள்வர் மாயம் எவர்க்கும் அறிதல் அரிது. பொற்கொல்லர் புகல்வது சாலவும் பொருத்தமுடையதே. இப்போது இவனைத் தப்ப விடின், அரசன் தண்டனை நமக்குத் தப்பாது, இனிச் செய்யத்தக்கதைத் துணிந்து சொல்லுங்கள்.” என்றான்.

அவ்வளவில் காவலாளிகளுள்ளே கள்ளுண்டு நின்ற கொலையஞ்சாப் பேதை மகன் ஒருவன், தன் கூரிய வாளால் கோவலனை வெட்டினன். அதனல் அவன் குருதி வெள்ளம் பெருக, நிலமகள் 'அந்தோ!' என்று புலம்பி வருந்த, பாண்டியனது வளையாத செங்கோல் வளைய, கொல்லன் கொல்லனேயாகத் துண்டு பட்டு வீழ்ந்து உயிர் துறந்தான்.

" நண்ணும் இருவினையும்; நண்ணுமின்கள் நல்லறமே ;
கண்ணகி தன்கேள்வன் காரணத்தால்-மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே ; பண்டை
விளைவாகி வந்த வினை.”