பக்கம்:கண்ணகி தேவி.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கண்ணகி தேவி

ரத்து மாசாத்துவானார் புதல்வர் கோவலர் மனைவி; அவர் ஊழ்வினையால் உனது ஊரில் எனது காற்சிலம்பை விற்க வந்து, உன்னாற்கொலையுண்டார்; என் பெயர் கண்ணகி" என்று கூறினாள். அரசன் கேட்டுக் "கள்வனை அரசர் கொல்லல் கொலையாமோ? நீதிதானே?" என்றான், கண்ணகி, "ஆராய்ந்து விசாரித்தறியாமல் கோவலருக்குக் கொலைத்தண்டம் விதித்தமையால் உனது நீதி முறைகெட்டது. என் சிலம்பின் அரி மாணிக்கம்; வேண்டுமாயின், சோதித்துப்பார்,” என்றாள். அரசன், "இவளுரைத்தது நேர்மையான வார்த்தையே; என் தேவியின் சிலம்பின் அரி, முத்தே,” என்று சொல்லி, இரண்டு சிலம்பையும் தருவித்துத் தன் முன்னரே வைத்தான். மாணிக்கப் பரலிருந்த கண்ணகி சிலம்பு, உடைந்து, பரல்கள் வெளிப்பட்டு, அரசனது கொலைத்தண்டம் விதித்த வாயைத் தண்டிப்பதுபோல வாயில்தெறித்தன.அதுகண்ட அரசன், "அந்தோ! பொற்கொல்லன் பொய்யுரை கேட்ட யானோ அரசன்! யானே கள்வன்! எனது அருமந்த திங்கள் மரபு என்னால் களங்கமுற்றதே! என் ஆயுள் இன்றோடுமுடிக!" என்றுமயக்கமுற்று இருந்தவாறே சிம்மாசனத்தில் வீழ்ந்து உயிர் துறந்தான். உடனே கண்ணகி தன் கைச்சிலம்பை அரசன் தேவி முன்னே எறிந்தாள்.

அது கண்ட கோப்பெருக்தேவி, தன் கணவன் இறந்தானென்பதையும் அறியாது,கண்ணகியை ஆற்றிப் பொறுதி கேட்க நினைந்து, உடல் நடுநடுங்கி உள்ளம் பதைபதைத்து, "ஐயோ! தந்தை தாய் முதலியோரை இழந்தார்க்குஅம்முறை சொல்லிப்பிறரைக் காட்டித் தேற்றலாம்; கணவனை இழந்தார்க்குத் தேற்றும் வகை யாதுளது? இது பற்றியன்றோ,