பக்கம்:கண்ணகி தேவி.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணகி தேவி

49


'மக்களிழக்த இடும்பையினும் மனையாளிழந்த
இடும்பையினும்
மிக்க இடும்பை ஒவாத விதவை இடும்பை'

என்று உலகம் கூறும் : என் செய்வேன்!” என்று சொல்விக் ‘காத்தருள வேண்டும்!’ என்று ஓலமிட்டுக் கண்ணகியின் இணையடியில் தொழுது விழுந்தாள்.

பின்னர்க் கண்ணகி, 'தேவியே, யான் ஒன்றும் அறியேன். ஆயினும்,

'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.'
'அல்லவை செய்தார்க்(கு) அறங்கூற்றம்'

என்ற ஆன்றோர் வாக்குகள் பொய்க்குமோ? நான் பத்தினிகள் பிறந்த பதியில் பிறந்தவள்; நானும் உண்மைப் பத்தினியேயாகில், அரசனோடு இம்மதுரையையும் அழிப்பேன், பார்! நீ என் பட்டிமையும் காண்பாய்," என்று சபதஞ்செய்து, அவ்விடத்தை விட்டு நீங்கினாள். கண்ணகி கூறிய வீரமொழிகளை முற்றும் கேளாமுன்னரே, கோப்பெருந்தேவி, அரசன் இறந்தானென்று அறிந்ததும் உடன் உயிர் துறந்தாள்.

அப்பால் கண்ணகி, மதுரையிலுள்ள பெண்களையும், ஆடவர்களையும், தெய்வங்களையும், முனிவர்களையும் முன்னிலைப்படுத்தி, "எல்லீரும் கேளுங்கள்: யான் யாதொரு குற்றமுமில்லேன்; என் காதலனக் கொன்ற அரசன் நகரின் மீது தணியாக் கோபங் கொண்டேன்!” என்று வீரமொழிகளைக் கூறி, வலக் கையால் இடமார்பைத்திருகி எடுத்து, மும்முறை மதுரையைச் சுற்றிவந்து, வீதியில் வீராவேசத்துடன் எறிந்தாள். உடனே அக்கினிதேவன் சடைமுடியோடு ஒரு பார்ப்பன வடிவுடன் வந்து, "மகா பத்தினீ,

4