பக்கம்:கண்ணகி தேவி.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.முகவுரை
வீரபத்தினியாகிய கண்ணகி தேவியின் வரலாறு, தமிழ் மொழியிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாய்ச்சிறக்து விளங்கும் சிலப்பதிகாரத்துள் விரித்துக் கூறப் பெறுவது. இஃது ஆயிரத்தெண்ணூறு வருடங்களுக்கு முன் காவிரிப்பூம் பட்டினம், மதுரை, வஞ்சி என்னும் சோழ, பாண்டிய, சேர நாட்டுத் தலைநகரங்கள் மூன்றின் சம்பந்தமும் பெற்ற உண்மைச் சரித்திரமாகும். இச்சரிதம் கடந்த காலமும் இதனைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் காவியமாகப் பாடிய இளங்கோவடிகள் காலமும் ஒரே காலமாகும்; இதனுள் இச்சரித்திரம், உண்மைக்கு எவ்வளவு மாறுபடாததாயிருக்குமென்பது கூறவேண்டுவதில்லை.

கண்ணகி தேவி சரிதையில், பெண்களின் உயர்வும், கற்பின் தெய்வத்தன்மையும், ஒழுக்கத்திறனும், வினையின் விளைவும் முதலாய பல நீதிகளும் பொருளும் அமைந்திருக்கின்றன.

கண்ணகிதேவியின் வணக்கம் முற்காலத்துத் தமிழ்நாட்டிலன்றிப் பிற நாடுகளிலும் பிரபலம் பெற்றிருந்ததென்று இச்சரித்திரத்தால் அறியப்படுதற்கேற்ப, இப்போதும் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும், வடநாட்டிலும் பழைய பத்தினி கோயில்கள் ஆங்காங்குக் காணப்படுகின்றன. அன்றியும், மதுரை வடக்குக் கோட்டை வாயிலிலுள்ள செல்லத்தம்மன் என்னும் துர்க்கை கோயில் அர்த்த மண்டபத்தில் தனிச் சந்நிதியோடு கண்ணகி விக்கிரகம்பிரதிஷ்டிக்கப்பட்டுள்ளதை இப்போதும் காணலாம். இவ்விக்கிரகம் இடக்கையில் சிலம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/6&oldid=1407952" இருந்து மீள்விக்கப்பட்டது