பக்கம்:கண்ணகி தேவி.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கண்ணகி தேவி

வும் கீரந்தையின் மனைவிக்குத் தெரியாது வந்து அவளைக் காத்து வந்தான். சில நாள் சென்ற பின் யாத்திரை சென்றிருந்த கீரந்தை திரும்பி வந்து, அன்றிரவு தன் மனைவியோடு பேசிக்கொண்டிருந்தான். வழக்கம்போலப்பார்ப்பனியைக் காப்பதற்குச்சென்ற பாண்டியன், அன்றிரவு வீட்டினுள் ஆண் அரவம் கேட்பதை அறிந்து திடுக்கிட்டுக் 'கள்வனோ, வேறு யாவனோ!' என்று அறிதற்குக் கதவைத் தட்டினன். உள்ளேயிருக்த கீரந்தை, 'கதவைத் தட்டியவன் கள்வனோ, வேறு யாவனோ!' என அஞ்சி ஐயமுற்றுத் திகைத்தான். அதனைக் கண்ட அவன் மனைவி, "நீர் யாத்திரை போகும்போது அரசவேலியே காக்கும் என்றுசொல்லிப் போனிரே ; இப்போது அவ்வேலி காவாதோ?" என்று கேட்டாள். இதனைக் கேட்ட பாண்டியன், 'ஆராயாது இச்செய்கையைச் செய்து இவர்களிருவருக்கும் மன வருத்தத்தை உண்டாக்கி விட்டோமே!’ என்று கதவைத்தட்டிய தன் கையை வாளால் வெட்டிவிட்டான். பின்பு அவனுக்குத் திருவருளால் பொற்கை வளர்ந்தது. இப்படிச் சிறிய குற்றத்தைச் செய்தாலும் பெரிய குற்றத்தைச் செய்ததாகப் பாவித்து அநுதாபப்படுகின்ற அன்னவன் குலத்தில் பிறந்தோர் செம்மையினின்று தவறுதல் ஒரு நாளுமில்லே; இன்னமும் கேள் :

"சோழகாட்டில் பராசரன் என்னும் பார்ப்பான் ஒருவன் இருந்தான். அவன் சேரநாட்டரசனாகிய மாந்தரஞ்சோலிரும்பொறை என்பவனது பெருங் கொடையைக் கேள்வியுற்று அவனிடம் சென்று, சபையிலுள்ள கல்விமான்களைத் தன் கல்வித் திறமையால் வாதம் செய்து வென்றான். அதற்காக அவ்வரசன் மிகுந்த ஆபரணங்களையும் பொன் முடிச்சையும் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவற்றைப்பெற்று வெற்றியுடன் மீண்டு தன்னூருக்குப் புறப்பட்டுவந்த