பக்கம்:கண்ணகி தேவி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

53

பார்ப்பான், பாண்டி நாட்டில் திருத்தங்கால் என்னும் ஊரையடைந்து, ஓர் அரசமரத்தடியில் (போதி மன்றத்தில்) உட்கார்ந்து,இளைப்பாறினன்.அவ்விடத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர் வந்து புதியவனான அவனைச் சூழ்ந்து நின்றனர். அவர்களைப் பார்த்து, அவன், 'பார்ப்பனச் சிறுவர்களே, நான் இப்போது உங்களைப் பரீக்ஷிக்கப் போகின்றேன்; நான் கேட்கிற சுருதியைத் தவறாது சொல்பவர்க்கு இந்தப் பொருள் முடிச்சைக் கொடுத்துவிடுகிறேன்,' என்று சொன்னான். அச்சிறுவறுள் வார்த்திகன் மகன் தக்ஷிணாமூர்த்தி என்பவன் மற்றை யாவரினும் சந்தந் தவறாமல் மகிழ்ச்சியோடு அந்தச் சுருதியை ஒதினன். அவனைப் புகழ்ந்து பராசரன், முத்துப்பூனூல்,காப்பு, பொற்காசுகள் முதலியன பொதிந்த அப்பொதியை அவனுக்குக் கொடுத்துத் தன்னூர்க்குச் சென்றான். ராஜ சேவகர்கள் தக்ஷிணாமூர்த்தி பரிசாகப்பெற்ற பொருள்களைக் கண்டு பொறாமை கொண்டு, 'ராஜ நீதிக்கு விரோதமாய் இந்தப் பார்ப்பான் களவுப் பொருளை வாங்கினான்,' என்று தகதினமூர்த்தியின் தந்தை வார்த்திகனைச் சிறைப்படுத்தினர். வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பவள், அது கண்டு துன்பமுற்றுப் பூமியில் விழுந்து புரண்டழுதாள். அதனால், மதுரைத் துர்க்கை தேவியின் கோயிற்கதவம் தானே அடைத்துக்கொண்டது. அச்செய்தியை அறிந்த பாண்டியன், 'என் அரசியலில் ஏதேனும் அநீதி உண்டாயதோ! துர்க்கைக்கு உற்ற துன்பம் என்ன ஆராய்ந்தறியுங்கள்,' என்று கட்டளையிட்டான். அப்போது சேவகர்கள் வார்த்திகனை அரசன் சமூகத்துக்கு அழைத்துவந்து, நடந்ததை உரைத்தனர். அதனையறிந்த அரசன் வார்த்திகப் பிராமணனைப் பார்த்து, 'இவ்வறிவில்லாதவர்கள் செய்கை நன்றன்று; இவர்களால் என் நீதி கெட்டது ; இதனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/61&oldid=1410872" இலிருந்து மீள்விக்கப்பட்டது