பக்கம்:கண்ணகி தேவி.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

57

பாடுங்கள் நறும்புகையெடுங்கள் ; பல பூக்களைத் தூவுங்கள்” என்று கூறிக்குரவைக்கூத்து நிகழ்த்தினர்.

கண்ணகி சேர நாட்டில் தெய்வமாதல் :

கண்ணகிக்கு இங்ஙனம் மலைவாணர்கள் குரவையாடிச் சிறப்புச்செய்த இச்சமயத்தில், சேர ராஜதானியாகிய வஞ்சிமாககரிலிருந்து அரசு செலுத்துபவனும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மகனுமாகிய செங்குட்டுவன் என்பான், இலவந்திகை மாடத்தில் தன் தேவி இளங்கோ வேண்மாளுடன் இருந்தவன், தேவியின் விருப்பப்படி மலை வளங் கண்டு களிக்கக் கருதினன். பின்பு அவ்வாறே தன் பரிவாரங்கள் சூழத் தன் தேவி வேண்மாளோடும் தம்பி இளங்கோவடிகளோடும் வஞ்சிமாநகரை விட்டுப் புறப்பட்டு, மலையை ஊடறுத்துக்கொண்டு இழியும் போாற்றங்கரையின் மணல் மிக்க எக்கரில் தங்குவானாயினன். அப்போது மலையில் குரவை நிகழ்த்தும் குறத்தியர் பாடலும், வேலன் பாட்டும், தினையிடிக்கும் ஓசையும், அருவியின் ஒலியும், புலியோடு பொருகின்ற யானையின் முழக்கமும், பரண்மீதிருந்து தினைப்புனம் காப்போர் கூப்பீடுகளும், இன்னும் பல்வகைஓசையும் ஆற்று மணலில் தங்கியிருக்கும் சேரனது சேனையின் ஆரவாரத்தோடு கலந்தொலித்தன. இவ்வமயத்தில், குறவர்கள் தங்கள் மலையில் வேங்கைமர நிழலிற் கண்ட அதிசயத்தை ஆற்றங்கரையில் தங்கியிருக்கும் தங்கள் அரசனுக்குத் தெரிவிக்கக்கருதி, யானைத்தந்தம், அகிற்கட்டை, சக்தனக்கட்டை, கவரி, தேன் குடம், சிந்துாரம், அரிதாரம், ஏலக்காய், வெற்றிலை, கூவைக்கிழங்கு (Arrow-root), மா, பலா, வாழைக் கனிகள், பூங்கொடிகள், பாக்குத்தாறு, ஆளிக்குட்டி சிங்கக்குட்டி, புலிக்குட்டி, யானைக்கன்று, குரங்குக்