பக்கம்:கண்ணகி தேவி.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கண்ணகி தேவி

குட்டி, கரடிக்குட்டி, மலையாடு, பன்னையாடு, மான் குட்டி, கஸ்தூரிக்குட்டி, கீரிப்பிள்ளை, மயில், கானக் கோழி, கிளி முதலிய மலைபடு பொருள்களைக் காணிக்கையாகச் சுமந்து, அரசன் சமுகத்திற்போய், 'ஏழ்பிறப்படியோம், வாழ்கனின் கொற்றம்' என்று அவன் அடி வணங்கினர்கள். பின்பு அவர்கள் அரசனை நோக்கி, "வேந்தர் வேந்தே, நாங்கள் வாழும் மலையிடத்து ஒரு வேங்கைமர நிழலில் மங்கையொருத்தி ஒரு பக்கமார்பு சிதைந்தவளாய்ப் பெருந் துயரோடும் வந்து நிற்க, தேவர் கூட்டம் அவ்விடம் வந்து அம்மங்கைக்கு அவள் காதற்கொழுநனக் காட்டி, அவளையும் தேவ விமானத்தில் அழைத்துச் சென்றனர்; அவள் எந்நாட்டாளோ, எவர் மகளோ, அறியோம்! இது பெரியதோர் அதிசயமாய் இராகின்றது ; பெருமானது நாட்டில் நிகழ்ந்த இதனை அறிந்தருளல் வேண்டும்,” என்று பணிவுடன் தெரிவித்தனர்.

அப்போது, மதுரையில் கோவலன் கொலையுண்டதும், கண்ணகி மதுரையை எரித்ததும் முதலாகிய செய்கிகளை நேரில் அறிந்தவராகிய மதுரைக் கூல வாணிகன் சாத்தனார் என்னும் தண்டமிழ்ப்புலவர், அரசனுடன் அங்கிருந்தவர், குறவர் கூறிய இச்செய்தியை அரசனுக்குத் தெரிவிக்கக் கருதி, "சேரர் வேந்தே, நான் அறிவேன் அது நிகழ்ந்த வாற்றை," என்று தொடங்கி, சிலம்பு கவர்ந்த திருடனென்று கோவலனைப் பாண்டியன் கொலை செய்வித்ததும், கண்ணகி பாண்டியன் முன் பெருஞ்சினத்துடன் வழக்குரைத்து வென்றதும், பாண்டியன், கொடுங் கோலுக்கஞ்சி உயிர் நீத்ததும், அவனிறந்தமை ஆற்றாது தேவியிறந்ததும், அரசியின் முன்பு கண்ணகி தன் சிலம்பை வீசி எறிந்துவிட்டுத் தனது மார்பைத் திருகி எறிந்து மதுரையை எரித்ததும் ஆகிய செய்திகளை விளங்கக் கூறிவிட்டுப் பின்பு, “பாண்டியனது கொடுங்கோன்மையைத் தலைமையரசனகிய உன்னி-