பக்கம்:கண்ணகி தேவி.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

59

டம் கூறவந்தவள் போலத் தன்னாடாகிய சோனாடு செல்லாது உனது நாட்டை வந்தடைவாளாயினள் அம்மங்கை” என்று கூறி முடித்தார்.

இவ்வாறு புலவர் கூறக்கேட்ட செங்குட்டுவன், பாண்டியனுக்கு நேர்ந்த தீவினைப்பயனுக்கு வருந்திப் "புலவீர், ஊழ்வினையால் செங்கோலினின்றும் வழுவிய செய்தி, எம் போன்ற அரசர் செவிகளிற் படு முன்பே தன் குற்றத்துக்கு இரங்கிப் பாண்டியன் தன்னுயிரை விட்டான். அவ்வாறுவிட்ட உயிரே ஓர் ஆணியாய்க்கொடுங்கோலைச் செங்கோலாய் நிமிர்த்து விட்டது:அரசராயுள்ளோர்க்குத் தம்நாட்டில் மழை, காலத்தே பெய்யாதாயின் அச்சம்; உயிர்கள் பிழை செய்யுமாயின் அச்சம்; கொடுங்கோலுக்கஞ்சி மன்னுயிர் காத்தலைக் கடப்பாடாகவுடைய அரசர் குடியிற் பிறத்தல் துன்பமல்லது இன்பமன்று”என்று சாத்தனார்க்குக் கூறிவிட்டுத் தன் தேவியை நோக்கி"அன்பிற்கருங்கலமாகிய பெண்ணே, கணவனுடன் உயிர் நீத்த பாண்டியன் தேவியும்,சினத்துடன் நம்காட்டை நாடி வந்த கண்ணகியும் ஆகிய இவ்விருபெரும்பத்திணிகளுள் யாவர் வியக்கத்தக்கவர்?’ என்று வினவினான். அதற்கு வேண்மாள், "தன் காதலனது துன்பத்தைக் காணப் பொறாது உயிர் நீத்த பண்டியன் பெருந்தேவி விண்ணுலகத்தேபேரின்பமுறக்கடவள்; அது நிற்க. இப்போது வேற்று நாட்டிலிருந்து நமது நாட்டைந்த பத்தினியை நாம் தெய்வமாகக் கோயில் செய்து பரசுதல் இன்றியமையாதது," என்று கூறினாள்.

இதனைக்கேட்ட அரசன் தன் தேவியின் விருப்பத்திற்கு இணங்கி, அமைச்சரை நோக்கினான். அதனையறிக்த அமைச்சர்கள் 'நம் நாடு நோக்கிவந்த அப்பத்தினித் தெய்வத்திற்குப் படிமம் சமைப்பதற்குரிய சிலையைப் பொதியமலையிலேனும் இமயமலையிலேனு-