பக்கம்:கண்ணகி தேவி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

கண்ணகி தேவி

மிருந்து எடுத்து வரல்வேண்டும்; அக்கல், பொதியக் கல்லாயின், காவிரியினும், இமயக்கல்லாயின், கங்கையிலும் நீராட்டித்தூய்மைசெய்தல் மரபாகும்"என்று கூறினர். இங்ஙணம் கூறக்கேட்ட செங்குட்டுவன், "பொதியமலையிற் கல் எடுத்துக் காவிரியில் நீராட்டல், எம்போன்ற வீரமிக்க சேரர்குடியிற்பிறந்தார்க்குச் சிறப்போடு பொருந்திய செய்கையாகாது; ஆதலால், இமயத்தில்கல்லெடுத்துக்கங்கையில் நீர்ப்படை செய்தலே எம் பெருமைக்கேற்ற செயலாகும்; இமய வரையன் நம் விருப்பிற்கிணங்கானாயின், வஞ்சி குடிச் சென்று பொருது சிலை பெறுவோம்," என்று விராவேசத்துடன் உரத்துக்கூறினான்.

இங்ஙணம் சேரன் கூறியதைக் கேட்ட வில்லவன் கோதை என்ற சேனாதிபதி, அரசனை வாழ்த்தி, "வேந்தே, உம்மைப்போலும் வேந்தராகிய சோழ பாண்டியர், உம்மொடு பகைத்துக் கொங்கர் செங்களத்திற்செய்த போரில், அவர்கள் தமது புலிக் கொடியையும், மீனக்கொடியையும் போட்டுவிட்டு ஓடியசெய்தி திசையானை களின் செவியிலும் சென்று எட்டியதன்றோ கொங்கணர், கலிங்கர், கருகாடர், பங்களர், கங்கர், கட்டியர், வடவாரியர் என்னும் அரசர்களுடன் உமது தமிழ்ப்படை கலந்து செய்த போர்க் களத்தில், நீவிர் யானைமேற்சென்று பகைவரை வெந்நிட்டழியச் செய்த அரியசெய்கை இன்னும் எங்கன் கண்களை விட்டகலவில்லை. அன்றியும் எம் கோமகளாகிய உம் தாயின் படிமத்தைக் கங்கையில் நீராட்டிய காலத்தில் எதிர்த்து வந்த ஆரிய மன்னர் ஆயிரவருடன் நீர் ஒருவராக நின்றுபொருத சினவெங்கோலத்தைக் கடுங்கண் கூற்றமும் கண்விழித்துப் பார்த்ததன்றோ! கடல் புடை சூழ்ந்த இந்நிலவுலகமுழுவதையும் வென்று தமிழ் நாடாக்கக் கருதிநீவிர் வடநாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/68&oldid=1411059" இலிருந்து மீள்விக்கப்பட்டது