பக்கம்:கண்ணகி தேவி.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

63

சென்ற சிங்க ஏறானது யானைக் குழாங்களைக்கண்டு பாய்வது போலப் பாய்ந்து, வடவரசர் சேனைகளைக் கொன்று குவித்து நூழிலாட்டினான். போரில் அழிந்தவர் போக, ஒழிந்தவர்களெல்லாம்தத்தம் படைகளை எறிந்துவிட்டு, சடை, காஷாய உடை, சாம்பல் இவற்றைப் பூசி, 'சந்நியாசிக'ளென்றும், பீலியேந்தி 'சைன முனிவர்" என்றும், இன்னும் 'பாணர்' என்றும், 'கூத்தரென்றும்' சொல்லித் தப்பியோடினர்.நாவைக் காவாது தமிழரசரை இகழ்ந்த கனக விசயர் இருவரும் தம் துனையரசர் ஐம்பத்திருவருடன் சேரன் கையில் அகப்பட்டனர். தேவாசு ரயுத்தம் பதினெட் டாண்டிலும், இராம ராவண யுத்தம் பதினெட்டுத் திங்களிலும், பாண்டவ கெளரவர் யுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவ கனகவிசயர் யுத்தம் பதினெட்டு நாழிகையிலும் முடிந்தன,” என்று உலகம் கொண்டாடப் பெரும்போர் புரிந்த அசகாய சூரனாகிய செங்குட்டுவன், பின்பு தன் சேனைத் தலைவன் வில்லவன் கோதையைப் படையுடன் போக்கி இமயமலையினின்றும் பத்தினிக் கடவுளின் படிமம் சமைப்பதற்குத் தக்க சிலையைக்கொணரச்செய்தான். பின்பு அதனைத் தோற்ற வேந்தராகிய கனகவிசயரது முடித்தலையில் எற்றிக் கங்கையை அடைந்து, சிலையைக் கங்கை நீரில் முறைப்ப்டி நீர்ப்படை செய்து, தென்கரைசேர்ந்து நூற்றுவர் கன்னரால் அமைக்கப் பட்ட அழகிய பாடியில் தங்கினன். பின்னர்ப் போரில் புறங்காட்டாது பொருத படைத் தலைவர்கட்கும் வீரர்கட்கும் வெற்றிக்கறிகுறியாகப் பொன்னாலாகிய வாகை மாலைகளை கெடும்பொழுதளவுமிருந்து வழங்கினான்.

இவ்வமயத்தில் கங்கையாடுதற்கு வந்த மாட லன் என்னும் மறையவன் செங்குட்டுவனது இருக்கைக்கு வந்து, அவனை வாழ்த்தி, ‘மாதவியின் கானல் வரிப்பாட்டானது, கனகவிசயரது முடித்தலையை

5