பக்கம்:கண்ணகி தேவி.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

75

நியமித்து, அப்பத்தினிக் கடவுளை மும்முறை வலம் வந்து வணங்கி சென் றான்.

இவன் இங்ஙனம்நிற்கச்சிறைப்பட்டு வந்திருந்து, கண்ணகியின் பிரதிஷ்டைகாலத்தில் விடுபட்டகனக விசயர் என்னும் ஆரிய வேந்தரும், முன்பே வஞ்சி நகரில் சிறைப்பட்டிருந்து விடுபட்ட மன்னரும், கொங்கினங்கோசர் என்ற சிற்றரசர்களும், மாளுவ தேசத்தாசரும், கடல் சூழ்ந்த இலங்கை அரசனாகிய கஜபாகுவும் செங்குட்டுவன் முன்னே அப்பத்தினியை வணங்கினவர்களாய்,"தேவி, எங்கள் நாட்டிற்கும் எழுந்தருளிவந்து இச்சேரமான் செய்த பிரதிஷ்டையில் பிரசன்னமானதுபோலப் பிரசங்கமாகி, எங்கட்கும் அருள்புரிய வேண்டும்.” என்று பிரார்த்தித்தனர். இங்ஙனம் அவர்கள் வேண்டி நின்ற போது, "தந்தேன் வரம் " என்று ஒரு தெய்வ வாக்கு யாவரும் கேட்க எழுந்தது. அது கேட்டுச் செங்குட்டுவனும் ஏனைய அரசர்களும் சேனைகளும் மோட்சலோகத்தையே நேரிற்கண்டவர்கள் போல மகிழ்ந்து ஆரவாரித்து நின்றனர். அதன் பின், செங்குட்டுவன் மாடலன் என்னும் மறையவனோடு பத்தினிக்கோட்டத்து யாகசாலையைப் பார்ப்பதற்குப் போவானாயினன்.

அதன்பின், செங்குட்டுவன் தம்பியாரும் இக்கண்ணகி சரித்திரத்தைச் சிலப்பதிகாரமென்னும் பெருங் காப்பியமாகப் பாடி முடித்தவரும் ராஜரிஷியும் கலியுமாகிய இளங்கோவடிகள், அப்பத்தினிக் கோட் டத்தை அடைந்தார். பத்தினித் தெய்வம் தேவந்தி மேல் ஆவேசமாய்த் தோன்றி, "சபாமண்டபத்தில் நீ உன் தந்தையாகிய சேரலாதனுடன். சிம்மாசனத்தடியிலிருந்த போது, ஒரு சோதிடன் வந்து உன்னைப் பார்த்து, 'அரசாளுதற்குரிய இலக்கணம் உனக்கே உண்டு' என்று சொன்னான். 'அர சாளுதற்குரியவனாக என் தமையன் செங்குட்டுவனிருக்க, நீ முறைமை கெடச் சொன்னாய் என்று அச்சோதிடனைக்கோபித்துப் பார்த்துத் தமையனாகிய செங்குட்டுவனது