உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகி தேவி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

செய்யுட்களின் குறிப்புரை


கொண்டு, கொங்கு-கொங்கு நாடு, குடமலை.மலைநாடு, தென்றமிழ்நாடு-தமிழ்நாடு,ஒரு மாமணி- முழுமாணிக்கம் போல்வாள,

23. அருத்திறல்வேனில்.முதுவேனில்,அலர்களைந்து-பூக்களைத் தாங்காது நீக்கி.

24. வடியாக்கிளவி-குற்றம் நீங்காத சொல், குரவர் பணி-பெற்றோர்க்குச் செய்யும் பணிவிடை, கையறு-செயலற்ற, குலப் பிறப்பு ஆட்டி- நற்குடியிற்பிறந்த கற்பையாளுதலுடைய கண்ணகி.

32. வானம் பொய்யாது-கால மழை பெய்தல் தவறாது, வளம் பிழைத்தல்-வளஞ்சுருங்குதல்.

41. *கண்ணகி தன் கேள்வன் காரணமாக......வளைந்தது.(இது) பண்டைவளை இருவினையும் (தவறாது) கண்ணும் (ஆதலால், உலகத்தீர்) கல்லறமே நண்ணுமின் எனக் கூட்டிம் பொருள் கொள்க.

42. கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்-பசுவின் கன்றையே குறுந்தடியாகக் கொண்டு விளங்கனியை உதிர்த்த கண்ணன். கன் றாகவும் விளாமரமாகவும் தன்னைக் கொல்ல வந்த அசுரர்களைக் கண்ணன் கொன்ற கதையைக் கருதியது இது,

43. மலயாரம்-சந்தனம், கடல் ஆரம்-முத்து, கோலா-கோக்கப்படாத, குருந்து -ஒரு மரம், ஒசித்தான்-ஒடித்தான், மடம் தாழும்-அறியாமை பொருந்திய,

49. இன்னா-துன்பம், அல்லவை-பாவம், அறம் கூற்றம்-தருமமே யமன்.

55. உம்மை வினை-பழவினை, உருத்த காலை-வருத்திய காலத்தில், செய்தவம்-முன் செய்த நல்வினை, தீவினைப்பயனைத் தனியாகவும், நல்வினைப்பயனைத் தனியாகவும் அநுபவித்தே தீரவேண்டும் என்பதாம்.

61. கடல் கடம்பு-கடல் தீவில் பகைவரது கடம்ப மரத்தை, எறிந்த-வெட்டிய .

62. தோட்டுனை. (தோள்-துணை)-மனைவி, துறவு-தலம், மன்ணனது திருமேனியாகிய சேனாமுகம் வாழ்க என்க.

76.புறஞ்சொல் போற்றுமின்-புறம் கூறுதலாகிய தீக் குணம் உம்மிடம் புகாமல் பரிகரியுங்கள், பொய்க்கரி-பொய்ச்சாட்சி, பொருண்மொழி.மெய் வார்த்தை, பிழை உயிர்-மரிக்கிற உயிர், அறமனை-இல்லறம், வெள்ளைக்கோட்டி-வீணர் சபை, உளநாள் வரையாது, உள்ள ஆயுள் நாள் வீணாகக்கழியாமல், ஒல்லுவது-இயலுவது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/88&oldid=1410920" இலிருந்து மீள்விக்கப்பட்டது