பக்கம்:கண்ணன் கருணை.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9அண்டகோளங்கள் நானாடுகின்ற பந்தடா!
என்னில் நீகலந்தால் ஏதடா மரணம்?
சொல்வது கண்ணன், சொல்லும் கண்ணனடா
எண்ணுவது கண்ணன் எண்ணங்களும் கண்ணன்
பந்தத்தை அறுத்துவிடு, பாசத்தை எரித்துவிடு
பற்றைக் களைத்துவிடு பற்றுக வில்லினை
காண்டீபம் அதிரட்டும் கணைகள் பறக்கட்டும்
காலன் பகைவர் கணக்கைத் தீர்க்கட்டும் |
பூபாரம் தீருகின்ற புண்ணியத்தை தொடங்கென்றான்


காண்டீபன்


மாதவனே மாலவனே எனக்கினிய மைத்துனனே
வில்லெடுக்க சொல்லி வைத்த குருக்கள்
கிருபரையும் துரோணரையும் கொல்லவோ
பிதாமகன் பீஷ்மரை வெல்லவோ வீழ்த்தவோ?

நானாடவில்லை என் தசை ஆடுகின்றது
எதிராக நிற்பதால் எனக்குரிய பந்துக்கள்
பகையானாரோ அவருயிரைப் பறிக்கவோ
வெதும்புகின்றேன் வேதனைத் தீ சுடுகின்றது.
என்னை அவர்கள் கொல்லினும் ஏற்கின்றேன்
வெற்றி வேண்டிலேன் இகழ்வைப் பொறுக்கின்றேன்

இருதரப்பில் எவர் வென்றாலும் தோற்றாலும்
குருகுலத்தின் பரம்பரை தான் அழிகின்றது.
கொள்ளிக்கடன் இருவருக்கும் பொதுவன்றோ
போர் நிறுத்த வழி என்ன புகலுக என்கோவே!

கண்ணன்

அன்புக்கினியவனே எனதருமை அர்ச்சுனா
உன்தம்பி சகதேவன் அன்று சொன்னான்