பக்கம்:கண்ணன் கருணை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

il நீங்கள் பாதகச் சூதாடி நின்றிருந்தீர் .கண்ணனை நீங்கள் கருதியிருந்தால் அன்று அது நடந்திருக்காது சகுனியின் சூழ்ச்சி வென்றிருக்காது அறத்தின் திருமகன் கரத்தை எரிக்க பீமன் எரிதழல் கேட்டிருக்க மாட்டான். சரித்திரம் படைக்கச் செய்த சபதமடா று இன்றுசமராக சூழ்ந்தது அறிக. போர்மூண்ட பின்னே புலம்புவது அறிவோ போரின்றேல் சாவில்லை என்பது உன்கணக்கோ அழிகின்ற உடல்களையே அழிக்கச் சொல்லுகின்றேன் வேண்டாதவருக்காக அழுகின்றாய் இருப்பவர் இறப்பார் இறப்பவர் பிறப்பார் தவிர்க்க முடியாத ஒன்றுக்குத் தவிப்பதேன் ஜீவனைத் தாங்கி நிற்கும் தேகம் ஐம்பதங்களின் கூட்டுறவு மனம் புத்தி அகந்தையும் சேர்க்கை அழியும் போது தனித்தனியே பிரிந்து போகும் ஆனால் குடியிருந்த ஆன்மாவுக்குச் சாவில்லை உடையை மாற்றும் உடலைப் போன்று உடல்கலை ஆன்மா மாற்றிக் கொள்ளும். உடலென்பது மானிடம் மட்டும் அன்று செடிகொடி மிருக ராசி யனைத்துமே ஆதலின் நீ அழுது பயனில்லை ஆகாயம் அழுக்குப் படுவதில்லை ஆன்மாவும் தோஷப் படுவதில்லை .பூங்காவில் புகுந்துவரும் காற்றில் மணமிருக்கும் .புழுதியில் அளைந்துவரும் காற்றில் அழுக்கிருக்கும்.நினைவு நிதானம் ஆசை அறிவு நான்கும் உடலின் தொழில்கள். இவை நல்லது ஆயின் புண்ணியமாகும் தீயதாயின் பாவம் சேரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/12&oldid=1355117" இலிருந்து மீள்விக்கப்பட்டது