பக்கம்:கண்ணன் கருணை.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 கோத்த மணிச் சரத்துக்குச் சரடு நான் நீரிலே குளிர்ச்சி நெருப்பிலே சூடு மண்ணிலே மனம் விண்ணிலே ரவி, இரவிலே நிலவாய் நிலவுகின்றேன் ஆண்மையும் அன்பும் அறமும் நானே தோன்றி அழிகின்ற மனித குலத்துக்கு தோற்றமும் முடிவுமில்லா என்னைத் தெரியவில்லை. உயிர்களின் பிறப்பனைத்தும் என்னுல் ஆனது உயிர்கள் அனைத்தும் ஒன்றென உணர்த்தவே நீரினத்து மீளுகப் பிறப் பெடுத்தேன் நீரிலும் நிலத்திலும் வாழத் தெரிந்த ஆமையுமாக அவதாரம் செய்தேன் சாந்தும் சக்தியும் சமமெனக் காட்டவே பன்றியாகவும் தோன்றிக் காட்டினேன் மானிட உணர்வும் மிருகபலமும் ஒன்று திரண்டதே நரசிம்மக்கோலம் வாமனக் குள்ளனுகவும் வந்தேன் ஒரடியால் உலகை அளக்கவும் வளர்ந்தேன் கடமை ஒன்றே எனது கருத்து o பந்த பாசத்துக்கு அப்பாற் பட்டவன் தந்தையின் சொல்லுக்காகத் தாயைக் கொல்லும் துணிவின் தொகுப்பே பரசுராமம் நல்ல மகன் நல்ல கணவன் நல்ல நண்பன் நல்லவீரன் தானெனச் சொல்லும் ராமனும் ஆனேன் எனக்கு அண்ணன் பலராமன் வணிகனடா ஜமதக்கினி மகளுகப் பிரம்மகுலத்தில் தசரதன் மகளுக மன்னர் குலத்தில் இடையர் குலத்தில் கண்ணன் ஆனேன் மேலாம் சாதிகளுக்கு அறிவு தெளியவே நாலாம் சாதியிலும் வளர்ந்து காட்டினேன்