பக்கம்:கண்ணன் கருணை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

| 5 உயிர்கள் உடல்களில் புகுந்து நடத்துகின்றன.உயிர்களை நடத்துகின்றேன் சுமக்கவும் செய்கின்றேன்.நான்மரை ஆறங்கம் நானன்றி வேறல்ல. சதுரப் பாட்டுக்கு சதுரங்கம் ஆடுகின்றேன்.காண்டீபன் ஆண்டகை உன் ஆட்டத்துக்கு பகடை நானோ .எல்லாம் நீ என்ற பின்னே நான் ஏனோ. கண்ணன். மைத்துனா!மாயைக்கு நீ ஆட்பட்டனை நாரணனும் நரனும் ஒன்றென்பது மறந்தனை.வெல்லுவதும் நீயல்லாத தோற்பதும் அவரல்ல.கொல்லுவதும் நீயல்ல கொலைப்படுவதும் அவரல்ல.குறி நோக்கிச் செல்லும் அம்புகளைச் செலுத்துவது நீயென்றால் உன் கரம் குறிக்கோள் நோக்கிச் செல்லும் மானிடத்தை செலுத்துவது விதி என்றால் நடத்துவது நானடா உயிரைக் கொல்ல ஒருவனும் இல்லை. உடலின் அழிவுக்கு மறுபெயர் மரணம் தவிர்க்க முடியாத முடிந்த முடிவு.குருவி பறந்த கூட்டினும் வேறல்ல உயிர் பிரிந்த உடலென்பதுணர்க.அந்தக் குருவி கோபுரத்திலும் அமரும் குப்பையையும் கிளறும்.விலக்கல்ல .கர்ம விதியின் படிக்கே என்றும் பிறவியின் தொடர்கதை தொடருமடா .ஆதலின் தொழிற்படுக மகனே தொழிற்படு----ம் சினமும் இல்லாது தொழிற்படு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/16&oldid=1355678" இலிருந்து மீள்விக்கப்பட்டது